new BB1

6020 MAH பேட்டரி திறன் கொண்ட, GIONEE MARATHON M5 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Loading...

20015743Gionee நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்ட ஒரு அறிவிப்பில், நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என கூறி இருந்தது. அதன்படி நேற்று, பெய்ஜிலிங்கில் நடந்த இந்நிறுவனத்தின் மாநாட்டில், Gionee நிறுவனம் M வரிசையில், அதிக பேட்டரி திறன் கொண்ட Gionee M5 போனை வெளியிட்டது.
அனைவரையும் பிரமிப்புக்குள்ளாக்கும் வகையில், இந்த மொபைலின் பேட்டரி திறன் 6020 mAh ஆக இருந்தது. இதற்கு முன் Innos நிறுவனம் 6000 mAh பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிட்டது. அதை தொடர்ந்து தற்போது Gionee நிறுவனம் இந்த போனை வெளியிட்டுள்ளதால், மார்க்கெட்டில் Innos நிறுவன ஸ்மார்ட்போனிற்கு இது நல்ல போட்டியாக அமையும் என நம்பப்படுகிறது.
Gionee Marathon M5 சிறப்பம்சங்கள்
6020 mAh திறன் கொண்ட இரட்டை பேட்டரி வசதி. ஒவ்வொரு பேட்டரியும் 3010 mAh திறன் கொண்டது.Amigo 3.1 ஐ அடிப்படையாக கொண்ட ஆண்டிராய்ட் 5.1 ஓ.எஸ்-ல் இயங்குகிறது.8.5mm தடிமனைக் கொண்டுள்ளது.2GB RAM வசதி.16GB இன்டெர்னல் சேமிப்பு திறன், இதை SD கார்டு மூலம் 128GB வரை விரிவுபடுத்தலாம்.1280 x 720 பிக்சல் வசதி கொண்ட 5.5 இன்ச் திரை.MediaTek (MT6735) 1.3GHz quad core பிராசசர்.LED பிளாஸ் லைட் இணைந்த 13MP முதன்மை கேமரா மற்றும் 5MP செல்பி கேமரா.4ஜி, 3ஜி, 2ஜி, Wi-Fi, ஜிபிஎஸ் மற்றும் ப்ளூடூத் போன்ற அனைத்து வசதிகளையும் சப்போர்ட் செய்யும்.
இரண்டு பேட்டரிகள் இருப்பதால், மற்றொரு பேட்டரி சார்ஜ் ஆக போனை அணைப்பதோ இட மாற்றவோ தேவை இல்லை. இரண்டு பேட்டரிகளும் ஒரே நேரத்தில் விரைவாக சார்ஜ் ஆக கூடியது.
இந்த Marathon M5, சீன மதிப்பில் RMB 2299 (இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ. 24,000/-) விலையில், சீனாவில் ஜூன் 25 முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
மேலும் இந்த போன் இந்தியாவில் வெளிவரும் தேதி மற்றும் இதன் விலை பற்றி எந்த ஒரு தகவலும் அறிவிக்கப்படவில்லை

Loading...

728

2