new BB1

NFINIUM Z51 NOVA ஸ்மார்ட்போனை வெளியிட்டது வீடியோகான்!

Loading...

videoconவீடியோகான் நிறுவனம் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான Infinium Z51 Nova என்ற போனை ரூ. 5,400-க்கு வெளியிட்டுள்ளது. இந்த போன் இந்தியாவில் ஆப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது.

வீடியோகானின் ஆப்லைன் ஸ்டோர்கள் வீடியோகான் இணையதளத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் State மற்றும் City பெயரை தேர்வு செய்வதன் மூலம், அந்தந்த ஊர்களில் உள்ள ஆப்லைன் ஸ்டோர்களைஅறிந்து கொள்ளலாம்.
ஆன்லைன் ஸ்டோரில் பிளிப்கார்ட் இணையத்தில், ரூ. 5,569-க்கு கிடைக்கிறது.
ஆனால் mysmartprice இணையத்தில், ரூ. 5,400 விலையில், விரைவில் கிடைக்கப்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வீடியோகான் Infinium Z51 Nova சிறப்பம்சங்கள்
ஆண்டிராய்ட் 4.4.2 KitKat ஓ.எஸ்480×854 பிக்சல் வசதி கொண்ட 5-இன்ச் FWVGA IPS திரை1.2GHz quad-core பிராசசர்.1GB RAM வசதி.8GB இன்டெர்னல் சேமிப்பு திறன், மைக்ரோ SD கார்டு மூலம் 32GB வரை விரிவுபடுத்தலாம்.LED பிளாஸ் லைட் இணைந்த 5MP முதன்மை கேமரா மற்றும் 2MP செல்பி கேமரா. இதன் முதன்மை கேமரா features-ல், Panorama mode, HDR mode, face beauty, self-timer, voice capture, smile shot, மற்றும் BSI போன்ற அனைத்து அம்சங்களும் அடங்கியுள்ளன.கனெக்டிவிடி அம்சங்களான ப்ளூடூத் 4.0, Wi-Fi, மைக்ரோ-யூஎஸ்பி, GPRS/ EDGE, GPS/ A-GPS, மற்றும் 3G போன்ற அனைத்தையும் சப்போர்ட் செய்யும்பேட்டரி 2000mAh திறன்எடை 131 கிராம்ஸ்Accelerometer, Ambient light சென்சார், மற்றும் proximity சென்சார் வசதி
இந்த போனில் அவசர உதவிக்கு பயன்படும் “V-Safe” என்ற ஆப் ஏற்றப்பட்டுள்ளது. நீங்கள் எதாவது ஆபத்தில் சிக்கிக் கொண்டால், மொபைலை ஷேக்(shake) செய்வதன் மூலம், இந்த ஆப் நீங்கள் ஆபத்தில் இருப்பதை, உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மெசேஜ் மூலம் தெரியப்படுத்திவிடும்.
மேலும் இதோடு 90 நாட்களுக்கான V-Secure ஆன்டி வைரஸ் ஆப்-ஐ இலவசமாக சப்ஸ்கிரைப் செய்து கொள்ளலாம்.
வீடியோகான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, Jerold Pereira கூறுகையில், “இந்த போனின் அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் மென்மையான செயல்பாடு பயனர்களுக்கு ஒரு நல்ல ஸ்மார்ட்போன் அனுபவத்தை தரும்.” என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இதே போல் கடந்த மாதம் Infinium Z45 Nova+ போனை ரூ. 4,900-ற்கு வீடியோகான் நிறுவனம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Loading...

728

2