new BB1

NUBIA X8 ஸ்மார்ட்போன் படம் மற்றும் சிறப்பம்சங்கள் கசிந்தது!

Loading...

20014830ZTE நிறுவனம் தனது Nubia Z9 ஸ்மார்ட்போனின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த X பதிப்பு ஸ்மார்ட்போனான Nubia X8 போனை வெளியிடவுள்ளது. இதன் அம்சங்களும், போட்டோக்களும் ஏற்கனவே இணையத்தில் கசிந்தது. ஆனால் தற்போது சீன உற்பத்தியாளர்களிடம் இருந்து சில தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளது.
அதன்படி இது மிக பெரிய சாதனமாக உருவாகியுள்ளதாம். ஆம் இது 6 இன்ச் திரை அளவு கொண்டுள்ளதாகவும், மிகவும் மெல்லிசமானதாகவும் உள்ளது. மேலும் இதன் முன்புற பேனலில் புதிதாக எந்த மாற்றமும் இல்லை. இதன் பிங்கர் பிரிண்ட் ஸ்கேன்னர் கேமரா லென்சிற்கு கீழே உள்ளது. இவ்வாறு போனின் வெளிப்புற அம்சங்கள் மட்டும் கிடைத்துள்ளது.
அதே போல் சில தினங்களுக்கு முன்பு இந்நிறுவனம் தங்களது Nubia இணையதளத்தில் இந்த போனை வரிசைப்படுத்தப்பட்டு பின் அதை நீக்கியது. அந்த பக்கத்தில் கிடைத்த தகவல்படி இந்த Nubia X8 7.9mm தடிமனைக் கொண்டுள்ளதாக கூறியது. இதனால் இது மிகப் பெரிய சாதனமாக கணிக்கப்பட்டாலும் மற்ற இன்டெர்னல் அம்சங்கள் அனைத்தும் சிறப்பாகவே இருந்தது.
பேட்டரி மற்றும் பிராசசர் பற்றி எதுவும் தெரியவில்லை ஆனால் மற்றபடி இந்த போன் 4GB RAM வசதியை கொண்டதாகவும் மற்றும் 32GB மற்றும் 64GB என்ற இரண்டு சேமிப்பு திறன் மாறுபாட்டில் கிடைக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது.
ஆனால் இந்த போனை வெளியிட்ட பின் அனைத்து அம்சங்களையும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். அது வரை காத்திருப்போம்.

Loading...

728

2