new BB1

SONY XPERIA Z3+ அறிமுகமாகும் திகதி அறிவிப்பு!

Loading...

14723சீரான கால இடைவெளிகளில் உலகத்தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்துவரும் சோனி நிறுவனம் Sony Xperia Z3+ எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்துள்ளது.
இதனை எதிர்வரும் ஜுன் மாதம் 15ம் திகதி அறிமுகம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இக்கைப்பேசியானது 5.2 அங்குல அளவுடையதும் 1920 x 1080 Pixel Resolution உடையதுமான HD தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Octa Core Qualcomm Snapdragon 810 Processor மற்றும் பிரதன நினைவகமாக 3GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவிர 20.7 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5.1 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெரா, 2900 mAh என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
எனினும் இதுவரை கைப்பேசியின் விலை தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Loading...

728

2