new BB1

WI-FI அழைப்புவசதியை EE வழங்கவுள்ளது!

Loading...

download (9)மொபைல் சிக்னல் இல்லாத வேளைகளில் Wi-Fi மூலம் அழைப்புகளை EE மொபைல் சேவை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இங்கிலாந்தில் உள்ள EE நெட்வேர்க்கின் இந்த வசதியின் மூலம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிக்னல் இல்லாதவேளையில் Wi-Fi அழைப்புக்களால் மக்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகின்றது.
ஏற்கனவே வேறு நிறுவனங்கள் ஒரே மாதிரியான appsமூலம் இத்தகைய வசதிகளை வழங்குகின்றன. ஆனால் EE ஐ பயன்படுத்துபவர்கள் apps பயன்பாடு இல்லாமல் 3G / 4G மற்றும் Wi-Fi மூலம் தடையற்ற அழைப்புக்களை மேற்கொள்ளமுடியும்.
இது குறித்து EE தெரிவிக்கையில்; Wi-fi அழைப்பு வசதி முதலில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாதாந்த வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்வர் என்றும் சாம்சங் கலக்ஸி, S6 மற்றும் S5 , ஐபோன் 5s, மற்றும் புதிய ஐபோன்கள் மைக்ரோசொப்ட் Lumia 640 போன்ற மொபைல் போன்களில் இந்தவசதி கிடைக்கக் கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த Wi-fi அழைப்பினை செயற்படுத்த குறிப்பிட்ட மொபைல் தரவு தேவைப்படும் எனவே பழைய போன்களில் இதனை பயன்படுத்த முடியாது. எனினும், EE மொபைல் நிறுவனம் விரைவில் ஒரு தனது பிரத்தியேக ஸ்மார்ட்போன்களை வழங்கவுள்ளதாக கூறியுள்ளது.

Loading...

728

2