new BB1

WORLD MUSIC DAY-வை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு இலவச மியூசிக்கை வழங்குகிறது ஏர்செல்!

Loading...

airce-free-musicவரும் ஜூன் 21 ஆம் தேதி நடக்கவிருக்கும் ‘World Music Day’ விழாவை முன்னிட்டு ஏர்செல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எந்த ஒரு சந்தாவும் வசூலிக்காமல் வரம்பற்ற இலவச மியூசிக் சலுகையை வழங்குகிறது.
இந்த தினத்தில் வாடிக்கையாளர்கள் “543213” மற்றும் “543219” என்ற இலவச எண்ணிற்கு அழைத்து எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் மியூசிக்/பாடல்/ஆல்பம் போன்றவற்றை கேட்டுக் கொள்ளலாம்.

Hungama வழங்கும் இந்த சேவை மூலம் புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்கள் தமக்கு பிடித்த மியூசிக்கை இந்த தினம் முழுவதும் இலவசமாக கேட்டு மகிழலாம்.
ஏர்செல் நிறுவனத்தின் தலைமை மார்கெட்டிங் அலுவலர்,அனுபம் வாசுதேவ் கூறுகையில், “ஏர்செல் இந்த ‘World Music Day’-வை தங்களது வாடிக்கையாளர்களுடன் கொண்டாடப் போவது மிகவும் மகிழ்ச்சியாக கருதுகிறது. இதனால் வரம்பற்ற இலவச மியூசிக்கை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ரீசார்ஜ், மற்றும் இன்னும் பல ஆப்பர்களும் இந்த தினத்தில் வாடிக்கையளர்களுக்கு வழங்கப்படும்” எனக் கூறினார்.
“Hungama Digital Media & Entertainment”-ன் துணைத்தலைவர், அனுஜ் பாஜ்பாய் கூறுகையில், “எங்கள் சேவை மூலம் இந்த World Music திருவிழாவை தொடர்வது மிகவும் சந்தோசமாக உள்ளது. இந்த வருடம் மூன்றாவது சீசனாக எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை தொடர்ந்து கொடுத்து வருகிறோம்.” என கூறினார்.
ஏர்செல்லின் ‘MusicConnect & Limitless Music’ மூலம் அதிகபட்சமான வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பயன்படுத்துவதால் Hungama & Aircel மார்கெட்டில் முன்னோடியாக திகழ்கிறது.
கூடுதலாக ஏர்செல் ஜூன் 21 முதல் ஜூலை 31 வரை World Music திருவிழாவை கொண்டாடவுள்ளது. மேலும் ஏர்செல் பிரிபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் ரிங்டோன்ஸ், டயலர் டோன்ஸ், மற்றும் வால்பேப்பர், போன்றவற்றை டவுன்லோடு செய்வதன் மூலம் அற்புதமான மொபைல் ரீசார்ஜ் மற்றும் தள்ளுபடி கூப்பன்களை பெறலாம்.

Loading...

728

2