new BB1

இந்த போன் ‘எதுவும்’ ஆகாது…!!

Loading...

மக்களின் தொலைதொடர்பு முறையில் புரட்சியை ஏற்படுத்திய கருவிகளில் மொபைல் போன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. முதலில் அழைப்புகளை மேற்கொள்ள வழி செய்த மொபைல் போன்களில் பின் குறுந்தகவல், மின்னஞ்சல், என பல்வேறு அம்சங்கள் கூடுதலாக வழங்கப்பட்டன.

16-1437045521-01turingphone

மக்களுக்கு பயனளித்த, தொடர்ந்து பயனயளித்து கொண்டிருக்கும் மொபைல் கருவிகளின் வளர்ச்சி தற்சமயம் மக்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில் இருக்கின்றது என்பது தான் உண்மை. இதற்கு முக்கிய காரணம் அவைகளில் வழங்கப்பட்டிருக்கும் எல்லையில்லா அம்சங்களே தவிற வேறு எதுவும் கிடையாது. அந்த வகையில் இன்றைய மொபைல் போன் கருவிகளில் அச்சமூட்டும் விதமாக இருப்பது அவைகளின் பாதுகாப்பு தான். அழைப்புகளில் துவங்கி இன்று பொருட்களை வாங்குவது வரை அனைத்திற்கும் மொபைல் போன்கள் பயன்படுத்தப்படும் நிலையில் அவைகளை பாதுகாக்கும் முயற்சியில் கண்டறியப்பட்டிருக்கும் கருவி தான் ட்யூரிங் போன். கீழ் வரும் ஸ்லைடர்களில் புதிய ட்யூரிங் போன் குறித்த தகவல்களை பாருங்கள்..

Loading...

728

2