new BB1

இருமலை குணப்படுத்தும் சித்தரத்தை

Loading...

இதன் வேர், கிழங்கு பகுதி பலன் தரக்கூடியவை. சித்தரத்தை எல்லாவகை நிலங்களிலும் வளரக் கூடியது. செம்மண்கலந்த சரளையில் நன்கு வளரும். இதன் இலைகள் நீண்டு பச்சையாக மஞ்சள் இலைபோன்று இருக்கும். இந்தக் கிழங்கு மிகவும் கடினமாக இருக்கும்.

குருமிளகு வாசனையுடையது. சித்தரத்தைக்கிழங்கை பச்சையாக எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி காயவைத்துப் பக்குவப்படுத்தி வைப்பார்கள். இது ஒரு வலி நிவாரணி, சளியைக் குணப்படுத்தும், இருமலைக் குணப்படுத்தும். மூட்டு வாத வீக்கம் குணப்படுத்தும். வயிற்றுப் புண் அலுசரைக் குணப்படுத்தும். தொண்டைப் புண்ணைக் குணப்படுத்தும்.

4c0299e2-709c-4e2b-9733-47d0ed204452_S_secvpf
சித்தரத்தை எடுத்து சுத்தப்படுத்தி விட்டு பிறகு ஒரு லிட்டர் தண்ணீர் விட்டுக் காச்சி அரை லிட்டராக ஆகும் வரை கவனித்து வடிகட்டி கசாயமாக காலை மாலை 50 மில்லி வீதம் குடித்து வந்தால் எப்பேர்பட்ட இருமலும் ஒரு வாரத்தில் குணமடைந்து விடும். அம்மி அல்லது சொரசொரப்பான சிமெண்ட் தரையில் இஞ்சிச் சாறுவிட்டு சித்தரத்தையை அதன் மேல் நன்றாக அழுத்தித் தேய்க்கவும்.

அதிலிருந்து வரும் விழுது போன்ற பகுதியை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். கீழ் முதுகு தண்டு வடப் பகுதியில் வலிக்குமிடத்தில் சித்தரத்தை விழுதினை மேலும் இஞ்சிச் சாறுவிட்டுத் தளர்த்தி அடுப்பில் வெதுவெதுப்பாக சூடாக்கி பற்றிட்டால் வலி குணமாகும். சித்தரத்தை, ஓமம், கடுக்காய் தோல், மிளகு, திப்பிலி, தாளிச்சபத்திரி, சுக்கரா இவற்றை சம அளவு எடுத்து பொடித்து சூரணம் செய்து தேனில் கலந்து தினமும் காலை மாலை 50 மில்லி வீதம் சாப்பிட சளி குணமடையும்.

மூட்டுவாத வீக்கம் குறைய தேவதாரு -100 கிராம், சாரணைவேர் – 100 கிராம், சீந்தில் கொடி – 100 கிராம், சித்தரத்தை – 100 கிராம், நெருஞ்சில் -100 கிராம், மேலும் ஆமணக்கு – 100 கிராம் இவைகளை பெருந்தூளாக இடித்து வைத்துக் கொண்டு 50 கிராம் பொடியை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு மெல்லிய தீயாக எரித்து 150 மில்லியாக சுண்ட வைத்து மருந்துகளை கசக்கிப் பிழிந்து வடிகட்டி வேளைக்கு 50 மில்லியாக ஒரு நாளைக்கு 3 முறை சாப்பிட்டு வந்தால் மூட்டு வாத வீக்கம் குணமாகும்.

சித்தரத்தையை எடுத்து இடித்து பொடி செய்து கொள்ள வேண்டும். இந்தப் பொடியை ஒரு தேக்கரண்டியில் போட்டு அதில் தேவையான அளவு தேன் விட்டு காலை மாலை சாப்பிட்டு வந்தால் தொண்டைப் புண் குணமடையும்.

Loading...

728

2