new BB1

கச்சிதமாக இருப்பதே அழகு!

Loading...

நல்ல உணவு, அமைதியான மனம், மலர்ந்த முகம் இந்த மூன்றுமே உலகின் தலைசிறந்த டாக்டர்கள். மூன்றும் நன்றாக இருந்தால் தோற்றத்தில் அழகு துள்ளும். இயற்கையாகவே பெண்கள் அழகுதான். அழகுக்கு மேலும் அழகு சேர்க்க சில டிப்ஸ்:

Beauty Looks-jpg-984

* பசுமையான மரம் செடி கொடிகளை அடிக்கடி பார்ப்பது, கண்ணுக்கு குளிர்ச்சி. மனதுக்கும் மகிழ்ச்சி.

* கன்னம் ஒட்டிப் போய் இருக்கிறதா? தினமும் வாயில் தண்­ணீர் ஊற்றி கன்னத்தின் உட்பகுதி விரியுமளவுக்கு நன்றாக கொப்பளியுங்கள்.

* ஆடை அணிவது முதலில் வசதிக்காக என்பது நினைவிருக்கட்டும். உடை உடலை கவ்விப் பிடிக்கும் அளவுக்கு இறுக்கமாக இருக்கவேண்டாம். ரிலாக்ஸ்டாக இருக்கிறது என்று ஓவராக தொளதொளவும் வேண்டாம். கச்சிதமாக இருப்பதே அழகு.

* வேலைக்கு போகும் பெண்களுக்கு புடவை கம்பீரமாக இருந்தாலும், இன்றைய சூழலில் அதை எப்போதுமே கட்ட முடிவதில்லை. சுடிதார், சல்வார் கமீஸ் சவுகர்யமாக இருக்கிறது. புடவை கட்ட முடியவில்லையே என்ற ஏக்கமின்றி அணியுங்கள்.

* வெளியூர் அல்லது உல்லாசப் பயணத்துக்கு ஜீன்ஸ் எப்போதும் வசதிதான். உடல் உழைப்பு அதிகம் தேவைப்படுகிற வேலை என்றாலும் ஜீன்ஸ் சவுகர்யம், பணியிடத்தில் இடுப்பு அல்லது பின்புறம் முழுமையாக தெரியும் வகையிலான குட்டை டாப்ஸை தவிர்ப்பது நல்லது.

* கூந்தலில் சிக்கு விழுகிறது என்ற பயத்தில் பலர் வாரம் ஒருமுறை தலை குளிப்பதைக்கூட தவிர்க்கின்றனர். தலையை குனிந்தபடி கூந்தலை முன்னால் போட்டு கைவிரல்களால் கோதி அழுத்தி நன்றாக அலசி சுத்தம் செய்யவேண்டும். அழுக்கு எளிதில் நீங்குவதுடன், சிக்கு விழாது. வெயில் காலங்களில் வாரத்திற்கு மூன்று தடவையாவது தலைக்கு குளித்தால் நல்லது.

* வெயில் காலத்தில் உடற்பயிற்சி செய்யும்போது கூந்தலை இறுக்கிக் கட்டக்கூடாது. முடி அதிகமாக உதிரிந்து விடும். தூக்கி குதிரைவால் போட்டு கட்டலாம். ரப்பர் பாண்ட் போட வேண்டாம்.

* தலையை துடைக்க தனியாக டவல் வைத்துக்கொள்ளுங்கள். முகத்துக்கு அதே துண்டை பயன் படுத்தும்போது, தலையில் இருக்கக் கூடிய பொடுகு முகத்தில் பருக்கள் வரக் காரணமாகலாம்.

* பொறுப்புள்ள பணியில் இருப்பவர்கள் ஓரளவு டல் கலரில் பேன்ட்டும் அதே துணியில் முக்கால் கை சட்டையும் அணியும்போது அசத்தலாக தோற்றமளிக்கும். கேஷுவல் உடைகளை பொறுத்தவரை இது பெண்களுக்கானது, இது ஆண்களுக்கானது என்ற வித்தியாசம் மறைந்து வருவதால் எதெல்லாம் உடலுக்கும் வேலைக்கும் சவுகர்யமாக இருக்கிறதோ அதையெல்லாம் அணிய பழகிக்கொள்ள வேண்டும்.

* என்னதான் பொறுமையாக நடந்து கொண்டாலும் அதை மீறி ஆத்திரம் உண்டாக்கும் வகையில் யாராவது ஏதாவது பேசுவார்கள், செய்வார்கள். இது வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் பொதுவானது. ஆனால் நம்மால் கோபத்தை வெளிப்படுத்த முடியாத நிலை இருக்கும். இதனால் உணர்ச்சிகள் உள்ளேயே அடக்கப்பட்டு டென்ஷன் நிறைந்திருக்கும். இது மிகவும் ஆபத்தானது. இத்தகைய சந்தர்ப்பத்தில் என்னதான் முயன்றாலும் நம்மால் அழகாக காட்சியளிக்க முடியாது. தியானம், யோகாசனம், இசை கேட்பது, பாடுவது, நடனமாடுவது போன்ற ஏதாவது ஒரு பொழுது போக்கில் ஈடுபட்டு மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்.

Loading...

728

2