new BB1

கூகிள் க்ரோமினுள் பதுங்கி இருக்கும் “டினோசார் கேம்”, ஆன்டிராயிடிலும் இருக்கிறது

Loading...

கம்ப்யூட்டர் இணையதளத்துடன் இணைய முடியாத வேளையில் திரையில் தோன்றும் T-Rex டினோசார்-ஐ பற்றி கூகிள் க்ரோம் பயனர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

19673

“Unable to connect to the internet” என்ற வாக்கியத்துடன் வரும் இந்த ஆப்லைன் டினோசாரின் வியக்கத்தகு விஷயம் என்னவென்றால் ஸ்பேஸ் பார்-ஐ அழுத்தியதும் கேமாக மாறிவிடுகிறது.
T-Rex டினோசார் ஓட தொடங்கியதும், கள்ளி செடி மீது மோதாமல் இருப்பதற்காக தாவித் தாவி செல்ல வைப்பது இந்த விளையாட்டில் நமது நோக்கம்.

ஜாவா ஸ்க்ரிப்டில் எழுத பட்டிருக்கும் இந்த விளையாட்டின், மூல குறியீடு(source code) குரோமியம் சேமிப்பகத்தில் இருக்கிறது.

இந்த டினோசார் கேம் டெஸ்க்டாப்பில் மட்டுமல்ல, ஆன்டிராயிட் மொபைலிலுள்ள க்ரோமிலும் இருக்கிறது.
இணைய இணைப்பை துண்டித்து விட்டு, உங்கள் குரோம் பிரவுசரில் ஏதாவது இணைய பக்கத்தை திறங்கள். “Unable to connect to the internet” என்று வரும். இப்போது கீபோர்ட்-டில் ஸ்பேஸ் பார் அழுத்தி விளையாட ஆரம்பியுங்கள்.

மொபைலில் ‘airplane mode’-ஐ ஆன் செய்து இதை முயற்சி செய்து பார்க்கலாம். மொபைலில் குரோம் பிரவுசர் திறந்து திரையை டச் செய்வதன் மூலம் இந்த டினோசாரை ஓட செய்யலாம்.

Loading...

728

2