new BB1

சத்தான காய்கறி போளி

Loading...

b24f2fe7-4143-4f54-b0e0-f59d37aa332f_S_secvpf

தேவையானவை:

கேரட் – 2
உருளைக்கிழங்கு – 2
முள்ளங்கி, முட்டைகோஸ் – கால் கப்,
கோதுமை மாவு – ஒன்றரை கப்,
பால் – அரை கப்,
பட்டை – 2 துண்டு,
சோம்பு – அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• முள்ளங்கி, கேரட், முட்டைகோசை துருவிக்கொள்ளவும்.

• உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் கேரட், முள்ளங்கி, முட்டை கோஸ் துருவலுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து… அந்தக் கலவையை அழுத்தி வைக்கவும்.

• 10 நிமிடம் கழித்து அதனை எடுத்து, மசித்த உருளைக் கிழங்கு, பட்டை, சோம்பு, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்த மல்லி, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

• கோதுமை மாவுடன் பால், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து… உருட்டிக் கிண்ணம் போல் செய்து, அதனுள் காய்கறி கலவையை வைத்து மூடவும்.

• அதனை சப்பாத்திக் கல்லில் இட்டு, சற்று கனமாகத் தேய்க்கவும்.

• இதேபோல் ஒவ்வொன்றையும் தேய்த்து தயார் செய்த பின் அவற்றை தோசைக்கல்லில் போட்டு, மிதமான தீயில் சுட்டெடுக்கவும்.

• சுவையான காய்கறி போளி ரெடி.

Loading...

728

2