new BB1

சத்தான பெப்பர் மஷ்ரூம் ஆம்லெட்

Loading...

49d0afe7-1e22-4ea1-9470-a6ed600d522e_S_secvpf

தேவையான பொருட்கள் :

ஆலிவ் எண்ணெய் -1 தேக்கரண்டி
சிவப்பு குடை மிளகாய் – 1
பச்சை குடை மிளகாய் – 1
காளான் – கால் கப்
வெங்காயம் – 1 சிறியது
முட்டை – 1 மற்றும் 3 முட்டையின் வெள்ளை கரு
உப்பு மற்றும் மிளகு தூள் – 1 சிட்டிகை

செய்முறை :

• குடைமிளகாய், காளான், வெங்காயம் அனைத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்..

• ஒரு கிண்ணத்தில் 1 முட்டை மற்றும் 3 முட்டையின் வெள்ளைக்கருவை உடைத்து ஊற்றி உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.

• அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் அதில் வெங்காயம், குடைமிளகாய், காளான் போட்டு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். காய்களின் கலர் மாறக்கூடாது

• 5 நிமிடம் வதங்கியவுடன் அதில் அடித்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி காய்கள் மீது முழுவதுமாக பரவும் படி நன்றாக பரப்பி விடவும். சுற்றி எண்ணெய் விடவும்.

• 2 நிமிடம் ஆனவுடன் திருப்பி போட்டு மீண்டும் 2 நிமிடம் ஆனவுடன் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

• சத்தான இந்த ஆம்லெட்டில் குறைந்த கலோரி உள்ளது. டயட்டில் உள்ளவர்கள் இதை காலை உணவாக எடுத்து கொள்ளலாம்.

Loading...

728

2