new BB1

சுவையான கோழி கோலா உருண்டை ரெடி!

Loading...

A1494_05
தேவையானபொருட்கள்
கொத்திய கோழி – 300 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பச்சைமிளகாய் – 5 அல்லது 6 எண்ணிக்கை
மல்லி இலை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவைக்கு
மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் துண்டு – 3
சீரகம் – 2 தேக்கரண்டி
சோம்பு – 2 தேக்கரண்டி
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 5 அல்லது 6 பல்
ஏலக்காய், கிராம்பு – தலா 5
பட்டை – சிறு துண்டு

செய்முறை
தேவையான பொருட்களை தயாராக வைக்கவும். கோழியை கழுவி தண்ணீரில்லாமல் வடிதட்டில் போட்டு தண்ணீரை வடித்து வைக்கவும். சின்ன வெங்காயத்தை நறுக்கவும்.

கோழியை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் நைசாக அரைக்கவும். அரைக்க கொடுத்த சாமான்களையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், மிளகாயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த கோழி, மசாலா, வெங்காயம், மிளகாய், உப்பு, மல்லி இலை, கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விடாமல் பிசைந்து கொள்ளவும்

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறு உருண்டையாக உருட்டி போடவும். (தீயை மிதமான சூட்டில் வைக்கவும். உருண்டை வேக 15 அல்லது 20 நிமிடம் ஆகும்)

உருண்டைகள் வெந்ததும் எடுத்து விடவும். இப்பொழுது சுவையான கோழி கோலா உருண்டை ரெடி

Loading...

728

2