new BB1

சுவையான ப்ரெட் சமோசா ரெடி!

Loading...

A1498_07
தேவையானபொருட்கள்
ப்ரெட் – 8 பீஸ்
மைதா – ஒரு கப்
கேரட் – 3 (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் – 5 (பொடியாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்தது)
கொத்தமல்லி தழை – சிறிது
இஞ்சி – பொடியாக நறுக்கியது
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கியது)
கரம் மசாலா, மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி

செய்முறை
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்

கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்

பின்னர், கேரட், பீன்ஸ் சேர்த்து நன்கு வதக்கவும்.

அதன் பின் உருளைக்கிழங்கு, கரம் மசாலா, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

கலவை நன்கு வாசனை வரும் போது உதிர்த்து வைத்து இருக்கும் ப்ரெட் துண்டுகளை போட்டு நன்கு கிளறவும்

மைதா மாவை, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து தேவைப்படும் வடிவில் தேய்த்து கொள்ளவும். அதன் நடுவே கடாயில் இருக்கும் கலவையை வைத்து ஓரங்களை சுருட்டி விடவும்.

பின்னர், எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். குழந்தைகள் விரும்பி உண்ணும், அதே சமயம் சத்தான சிற்றுண்டி இது. காரம் நமக்கு தகுந்தாற் போல் போடலாம். காய்கறிகளின் கார கலவையில், ப்ரெட்டின் சிறு இனிப்பில் டேஸ்ட் அருமையாக இருக்கும்.

Loading...

728

2