new BB1

சுவையான மீட் ஷெல்ஸ் ரெடி!

Loading...

A1505_08
தேவையானபொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் / மட்டன் – 200 கிராம்
எலுமிச்சைச்சாறு – 2 மேசைக்கரண்டி
மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கியது )
சிகப்பு குடை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 2 பல் (பொடியாக நறுக்கியது)
மைதா மாவு – ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா – ஒரு தேக்கரண்டி
தயிர் – 2 மேசைக்கரண்டி
சிக்கன் ஸ்டாக் – கால் கப்
சோர் க்ரீம் (sour cream) – 2 மேசைக்கரண்டி
மல்லி தழை – அலங்கரிக்க
சீஸ் – அரை கப்
பேஸ்ட்ரி ஷீட்ஸ்

செய்முறை
சிக்கனிலோ அல்லது மட்டனிலோ எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகு தூள் போட்டு பிரட்டி ஆலிவ் எண்ணெயை சூடாக்கி அதில் இந்த கலவையை போட்டு வேக விடவும். வெந்ததும் தனியாக எடுத்து ஆற வைத்து பொடியாக நறுக்கவும்.

அதே பானில் வெண்ணெய் சேர்த்து சூடானதும் பூண்டு, வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

இப்பொழுது மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா மற்றும் தயிர் சேர்த்து கிளறவும்.

அதன் பிறகு சிக்கன் ஸ்டாக் சேர்த்து பொடியாக நறுக்கி வைத்துள்ள கறியை சேர்க்கவும்.

ஓரளவு வதங்கியதும் தக்காளி, மைதா மாவு மற்றும் க்ரீம் சேர்த்துக் கிளறவும். (மாவு, அந்த ஸ்டாக்கை திக்காக ஆக்குவதற்காக சேர்ப்பது). கலவை நன்கு சுருண்டு திக்கானதும் அடுப்பை அணைத்து கொத்தமல்லி தூவவும்.

ஒரு மஃபின் பான் எடுத்து குக்கிங் ஸ்ப்ரே அடித்து அதில் பேஸ்ட்ரி சீட்டை இப்படி வெட்டி வைக்கவும். இதனை 400 F முற்சூடு பண்ணிய அவனில் பதினைந்து நிமிடம் வைத்து எடுக்கவும்.

பதினைந்து நிமிடம் கழித்து வெளியே எடுத்து ஐந்து நிமிடம் ஆறியப்பின் கலவையை வைத்து அதன் மேல் சிறிதளவு சீஸ் தூவி மறுபடியும் அவனில் வைக்கவும்.

ஐந்து முதல் பத்து நிமிடம் கழித்து எடுத்து பத்து நிமிடம் ஆற விட்டு மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும். சுவையான சுலபமான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி. பார்ட்டிக்கு ஏற்ற மெனு.

Loading...

728

2