new BB1

சுவையான மீல்மேக்கர் ப்ரை ரெடி!

Loading...

A1493_05
தேவையானபொருட்கள்
மீல்மேக்கர் – 100 கிராம்
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
பெருஞ்சீரகம் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
சோளமாவு – இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் – பொரிக்க

செய்முறை
மீல் மேக்கரை அரை மணி நேரம் நன்றாக தண்ணீரில் ஊற வைத்து பிறகு பிழிந்து தண்ணீர் இல்லாமல் தனியே எடுத்து வைக்கவும்.

பின்னர் அதனுடன் மேலே கொடுத்து இருக்கும் பொருட்களில் எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்க்கவும் (தண்ணீர் தேவையில்லை)

மீல் மேக்கரில் நன்றாக படும்படி சேர்த்து பத்து நிமிடம் ஊற வைக்கவும்.(விருப்பப்பட்டால் முட்டை வெள்ளை கரு சேர்க்கலாம்)

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரட்டி வைத்திருக்கும் மீல்மேக்கரை போட்டு பொரித்து எடுக்கவும்.

சூடான மீல்மேக்கர் ப்ரை ரெடி.

Loading...

728

2