new BB1

பாதங்களுக்கு மசாஜ்!

Loading...

ld1985நாள் முழுக்க உழைத்துக்களைத்த உடம்பு… படுக்கையில் சாய்ந்ததும், யாரேனும் கால்களைப் பிடித்து விட்டால் எவ்வளவு இதமாக, சுகமாக இருக்கும்? கால்களை பிடித்து விடுகிற போது அத்தனை களைப்பும் காணாமல் போய் உடலும், மனமும் அமைதியாகி விடுமல்லவா?

காரணம் கால்கள் அத்தனை பவர்ஃபுல்!

ஆனால் நமது உடலிலேயே அதிகளவு புறக்கணிக்கப்படுகிற பகுதி கால்கள் தான். உடலின் ஒட்டு மொத்த எடையையும் தாங்கக்கூடிய கால்களை நாம் கவனிப்பதே இல்லை. கால்களில் வலி ஏற்படும்போதோ, வீங்கினாலோ மட்டும் தான் கால்களின் மீது கவனம் செலுத்துகிறோம்.

பெடிக்யூர் சிகிச்சைகள் கால்களை அழகாக்குமே தவிர உடலை ரிலாக்ஸ் செய்யாது. எனவே கால்களை மஜாஜ் செய்து ஒட்டு மொத்த உடலுக்கும் புத்துணர்ச்சி தர செய்கிற ரெஃப்ளெக்சாலஜி சிகிச்சை இப்போது நம்மூரில் பிரபலமாகி வருகிறது. அதைப்பற்றி வளக்கமாக பேசுகிறார் ஹபிபுன்னிசா. இவர் இதற்காகவே பிரத்யோக மையம் நடத்தி வருகிறார்.

தாய்லாந்து மலேசியா நாடுகள்ல ரெஃப்ளெக்சாலஜி ங்கிற மஜாஜ் ரெம்பவும் பிரபலம். நம்மூரில் அழகுக்காக பியூட்டி பார்லர் போற மாதிரி அங்கெல்லாம் ரிலாக்ஸ் பண்ணிக்க ரெஃப்ளெக்சாலஜி சென்டர்களுக்கு போறாங்க. மனித உடம்புல கால்கள் ரொம்ப முக்கியமான உறுப்பு. அதுதான் ஆயிரக்கணக்கான நரம்பு முனைகள் சந்திக்கிற இடம். பாதத்துல முக்கியமான சில அழுத்தப்புள்ளிகள் இருக்கு. அது ஒவ்வொண்ணும் இதயம், நுரையீரல், சிறுநீரகம், கர்ப்பப்பை, கணையம், மூளைனு முக்கிய உறுப்புகளோட சம்பந்தப்பட்டது. அந்த அழுத்தப்புள்ளிகளை தெரிஞ்சிக்கிட்டு அந்த இடத்துல மஜாஜ் செய்யறப்ப, சம்பந்தப்பட்ட உறுப்புல ரத்த ஒட்டம் சீராகும்.

முதல் கட்டமா களைப்பா இருந்த உடம்பு உடனடியாக உற்சாமாகும். தூக்கமின்மை, தைராயிடு, சைனஸ், தலைவலி, கை, கால், மூட்டு வலி, டென்ஷன், மன உளைச்சல்னு தலைலேர்ந்து, கால் வரைக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் இதுல தீர்வு இருக்கு என்கிற ஹபிபுன்னிசா, இந்த ரெஃப்ளெக்சாலஜி சிகிச்சையை, அதன் நுணுக்கங்கள் தெரிந்த நிபுணரிடம் மட்டுமே செய்து கொள்ள வேண்டும் என்கிறார்.

முதலில் கால்கள் அழுக்கின்றி சுத்தப்படுத்தப்பட்ட பிறகே மஜாஜ் ஆரம்பமாகிறது. மஜாஜின் போது இலகுவாக இருக்க லெமன்கிராஸ் ஆயில் உபயோகப்படுத்தப்படுகிறது. பாடி மஜாஜ் செய்ய கூச்சப்படுகிறவர்கள், அதே பலனை இந்த ரெஃப்ளெக்சாலஜியில் பெறலாம். தவிர இதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற நச்சு நீர் வெளியேற்றப்படுகிறது. அடிக்கடி கை, கால்களில் சுளுக்கு நரம்பு சுருட்டிக்கொள்ளுதல், போன்றவற்றால் பாதிக்கப்படுவோருக்கு இது நிவாரணம் தருகிறது. ரத்தஓட்டம் மேம்படுத்துதல், முகத்தில் பொலிவு கூடுவது கண்கூடு. முதுமைத் தோற்றம் தள்ளிப் போகிறது. கர்ப்பிணிகளையும் இதய நோயாளிகளையும் தவிர்த்து 18வயது மேற்பட்ட யாரும் இதை செய்யலாம்.

டிப்ஸ்

திடீர் மூக்கடைப்பா? கால் நகங்கள் ஒவ்வொன்றையும் நான்கு பக்கங்களிலும் 15 முறைகள் அழுத்திக் கொடுக்கவும். சில நிமிடங்களில் மூக்கடைப்பு சரியாவதை உணரலாம்.

சாயும் வசதியுள்ள நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளவும். கால்களை நீட்டிக்கொண்டு இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் சுழற்றவும். பிறகு முன்னோக்கியும், பின்னோக்கியும், பாதங்களை தள்ளவும். இப்படி செய்தால் நீண்ட நேரம் நின்றதால் உண்டான கால் வலி அசதி நீங்கும்.

தூக்கமில்லாமல் அவதிபடுகிறவர்கள் குதிகாலுக்கு சற்றுமேலே அழுத்திவிட்டுக்கொள்ளலாம். அவ்வாறு செய்து கொண்டிருக்கும் போதே தூக்கம் கண்களை தழுவத் தொடங்கும்.

Loading...

728

2