new BB1

புளித்த மோரில் பொலிவாகும் முகம்!

Loading...

ld1537சந்தனம், மருதாணி பேஸ் பாக் உபயோகித்து வர முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும். கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள் எலுமி ச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.

ஆலிவ் எண்ணெய்யுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கையில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளில் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.

பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும். 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து , சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி செய்துவர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறுமுள்ள புள்ளி மறையும். தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும்.

பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும். புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

முழங்கை (முட்டி) கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறும்.
தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும்
கருமை நிறம் மறையும். தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.

Loading...

728

2