new BB1

முகத்தின் அழகு அகத்தில் தெரியும்!

Loading...

ld2003பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது பளிச் சருமம் காற்றில் பறக்கும் கூந்தல் மற்றும் எப்போதும் பிரஷ்ஷான புன்சிரிப்பு. இந்த மூன்றுக்காகவும் பல அழகு சாதனங்கள் கடைகளில் உள்ளன. ஆனால் அவற்றில் பல தேவையே இல்லாதவை என்கிறார் அழகு கலை நிபுணர் லதாமணி ராஜ்

சாதாரண வறண்ட எண்ணெய் பசை மற்றும் காம்பினேஷன் என சருமத்தை நான்கு வகையாக பிரிக்கலாம். சாதாரண சருமம் உள்ளவர்களுக்கு சருமம் வறண்டு காணப்படாது. அதே சமயம் எண்ணெய் பசையும் இருக்காது. வறண்ட சருமம் உள்ளவர்களின் முகத்தில் எந்நேரமும் எண்ணெய் வழிந்து கொண்டிருக்கும். காம்பினேஷன் சருமம் உள்ளவர்களுக்கு மூக்கு, நெற்றி மற்றும் தாடை பகுதியில் மட்டும் எண்ணெய் பசை காணப்படும். எனவே ஒருவரின் சருமம் எந்த வகையை சேர்ந்ததோ அதற்கு ஏற்பவே அவர்கள் சோப்பு, ஷாம்பு, ஃபேஸ்வாஷ் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

உடலில் மிருதுவான என்றால் அது சருமம் தான். எனவே சோப்புக்கு பதில் ஃபேஸ்வாஷ் பயன்படுத்தலாம். காரணம் இதில் அதிக ரசாயனம் இருக்காது. சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை முற்றிலும் நீக்காமலேயே பொலிவைத் தரும். ஃபேஸ்வாஷ்களில் சருமத்திற்கேற்ப பல வகைகள் உண்டு. சாதாரண சருமம் உள்ளவர்கள் லைட்டோன் அல்லது சந்தனம் அடங்கிய ஃபேஸ்வாஷை பயன்படுத்தலாம். எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு ஆயில் டோன் அல்லது மஞ்சள் தன்மை உள்ள ஃபேஸ்வாஷ் ஏற்றது.. வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு எண்ணெய் தன்மை கொண்டதை பயன்படுத்தலாம். வேம்பு, துளசி, கலந்த ஃபேஸ்வாஷ் முகத்தில் பரு, கரும்புள்ளி உள்ளவர்களுக்கு ஏற்றது.

ஃபேஸ்வாஷ் அலர்ஜி என்பவர்கள் கடலை மாவு, பயத்தம் பருப்பு, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை தலா ஒரு கைப்பிடி எடுத்துக்கொண்டு இரண்டு பாதாம், பருப்பை அதனுடன் சேர்த்து நிழலில் காயவைத்து அரைத்து பயன்படுத்தலாம். சிலர் உடலில் சோப்பு போட விரும்ப மாட்டார்கள். அவர்கள் கடலை மாவு ஒரு கப், பயத்தம் மாவு ஒரு கப், கஸ்தூரி மஞ்சள் கால் கப் வாசனைப்பொடி(நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்) கால் கப், காய்ந்த எலுமிச்சை பழ தோலை பொடி செய்தது கால் கப், பத்து பாதாம் பருப்பை காயவைத்து பொடி செய்தது, கசகசா பொடி கால் கப் இவற்றுடன் சிகப்பு செம்பருத்தி பூவை காயவைத்து பொடி செய்து கலந்து தினமும் தேய்த்து குளிக்கலாம்.

சென்னையை பொறுத்தவரை 365 நாட்களும் வியர்வை பிரச்சனை இருக்கும். அதனால் ஏற்படும் உடல் துர்நாற்றத்தை போக்க வந்ததுதான் டியோடிரன்ட். இது பல வாசனைகளில் வருகிறது. சிலருக்கு டியோடிரன்ட் பயன்படுத்தும் போது சருமத்தில் அரிப்பு தடிப்புத்தன்மை, ஏற்படும். அவர்கள் மெல்லிய துணியில் டியோடிரன்டை ஸ்பிரே செய்து அக்குள் பகுதியில் தடவிக்கொள்ளலாம்.

காற்றில் அலைபாயும் கூந்தலை விரும்பாத பெண்களே கிடையாது. முடியின் தன்மைக்கேற்ப பல ஷாம்புகள் உள்ளன. அதிக ரசாயனக் கலவை இல்லாத ஷாம்புகள் தலைமுடியை பாதிக்காது. ஷாம்புவை பயன்படுத்துபவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் தலைகுளிக்க வேண்டும். தலைமுடியை முதலில் தண்ணீரில் அலசிவிட்டு பிறகு ஷாம்புவை தண்ணீரில் கரைத்து குளிக்க வேண்டும். பொடுகு பிரச்சனை உள்ளவர்கள் அதற்கான ஷாம்புவை பயன்படுத்தலாம் அல்லது செம்பருத்தி இலை வெந்தயம் இரண்டையும் புளித்த தயிரில் இரவே ஊறவைத்து மறுநாள் அரைத்து தலைக்கு அலசினால் பொடுகு பிரச்சனை குறையும்.

Loading...

728

2