new BB1

முள்ளங்கி பொடிமாஸ்

Loading...

A1486_08முள்ளங்கி – 3
வெங்காயம் -1
முட்டை – 2
பச்சை மிளகாய் – 2 (காரத்திற்கு ஏற்ப கூட்டலாம்)
மிளகு தூள், உப்பு – தேவைக்கு ஏற்ப
எண்ணெய், கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை – தாளிக்க
கொத்தமல்லி – சிறிதளவு

வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். முள்ளங்கியை துருவி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கறிவேப்பிலையை தாளிக்கவும்.

அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின்பு துருவிய முள்ளங்கியை சேர்த்து வதக்கவும்.

மிளகு தூள், உப்பு சேர்த்து முட்டையை அடித்து வைக்கவும்.

முள்ளங்கி பாதி வெந்ததும் முட்டையை ஊற்றவும்

உதிரியாக வரும் வரை சிம்மில் வைத்து கிளறவும்.

கடைசியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

Loading...

728

2