new BB1

வீட்டிலேயே பியூட்டி ஆகலாம்!

Loading...

498239360முதுமையை விரட்டுங்கள் என்றும் இளமையாக இருக்க எல்லாருக்கும் ஆசைதான். ஆனால் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நிமிடமும் நமது சருமத்துக்கும் கூந்தலுக்கும் வயது கூடிக்கொண்டே போவதை மறுக்க முடியாது. முன்பெல்லாம் வர வேண்டிய வயதில் சரியாக வந்து கொண்டிருந்த முதுமை, இன்று மிக இளம் வயதிலேயே வருகிறது. சருமம் தொய்வடைகிறது.

கூந்தல் மெலிந்து, நரைக்கிறது. உடலெங்கும் சுருக்கங்கள் தோன்றுகிறது. முதுமைத் தோற்றத்துக்கான காரணங்கள் பற்றியும், தவிர்க்கும் முறைகள், சிகிச்சைகள் பற்றியும் விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

வாழ்க்கைமுறை மாறிப்போனதுதான் முதல் காரணம். மன அளவுலயும் உடல் அளவுலயும் இன்னிக்கு சோம்பேறித்தனம் அதிகமாயிடுச்சு. ஜங்க்

உணவுகள், நேரங்கெட்ட நேரத்துல சாப்பாடு, தூக்கம், உடற்பயிற்சியே இல்லாதது, அதிக பயணம், ஆல்கஹால், மன அழுத்தம்னு நிறைய விஷயங்கள் இளமைத் தோற்றத்தைப் பாதிக்கலாம்.

அறிகுறிகள் ஆரம்பிச்ச உடனேயே சிகிச்சைகள் எடுத்துக்கிறதும், வராமத் தவிர்க்கறதும் ரொம்ப முக்கியம்.

வீட்டிலேயே செய்யக் கூடிய சிகிச்சைகள்…

அடர்த்தியான கூந்தல், முதுமையோட அறிகுறியால மெலியத் தொடங்கும். தலைல அங்கங்க முடி உதிர்ந்து, வழுக்கை மாதிரித் தெரியும். ஒரு

கிண்ணத்துல ஆலிவ் ஆயிலை விட்டு, அதை வெந்நீர் உள்ள இன்னொரு பாத்திரத்துல வச்சு, லேசா சூடாக்கி, காலைல எழுந்ததும் தலைக்குத்

தடவணும்.

2 மணி நேரம் ஊறி, ரோஜா இதழ், பயறு, வெந்தயம் சேர்த்து, வீட்ல அரைச்ச சீயக்காய் உபயோகிச்சு, தலையை அலசலாம்.அரை டீஸ்பூன் பாதாம் ஆயிலை, அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெயோட கலந்து, 20 லிட்டர் வெதுவெது தண்ணீர்ல விட்டு, குளிக்க உபயோகிக்கலாம். இது சருமத்தை பட்டு மாதிரி மென்மையாக்கி, இளமையைத் தக்க வைக்கும்.

சோப்புக்குப் பதில் கடலை மாவு, அரிசி மாவு, பயத்த மாவு மூணையும் சம அளவு கலந்து, தண்ணீர் விட்டுக் குழைச்சு முகம், கழுத்து, உடல்

முழுக்கத் தேய்ச்சு, இறுகினதும், தண்ணீர் தொட்டு விரல்களால தேய்ச்சுக் குளிக்கலாம். காலைல எழுந்ததும், பச்சைப்பால்ல பஞ்சை நனைச்சு, முகம், கழுத்து, முதுகு, கைகள்னு எல்லா இடங்கள்லயும் தடவிட்டு, வேலைகளைப் பார்க்கலாம்.

சில மணி நேரம் கழிச்சுக் குளிச்சா, சருமம் பளபளப்பாகும். சுருக்கங்கள், கருமை எல்லாம் மறையும்.டீ டிகாக்ஷனோட, கொஞ்சம் பன்னீர், கொஞ்சம் வெள்ளரிச்சாறு கலந்து, பஞ்சை நனைச்சு, மதிய நேரத்துல கண்களுக்கு மேல வச்சுக்கிட்டு, கால்களை உயரத்துல வச்சபடி ஓய்வெடுக்கவும். இது கண்களைச் சுத்தின கருமை, சுருக்கங்களை விரட்டும்.

வைட்டமின் இ கேப்ஸ்யூல் (400 மி.கி.) ஒன்று எடுத்து, அதுக்குள்ள இருக்கிற எண்ணெயை தூங்கறதுக்கு ஒரு மணி நேரம் முன்னாடி முகம்,

கழுத்துல தடவி, அப்படியே விடவும். மறுநாள் காலையில முகம் கழுவலாம். தொடர்ந்து இப்படிச் செய்து வந்தா, சருமம் பளபளப்பா, இளமையா

இருக்கும்.

2 டேபிள்ஸ்பூன் ஓட்ஸை, 4 டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு கஞ்சி மாதிரிக் காய்ச்சி, அதுல 1 டீஸ்பூன் தேன் கலந்து, முகம், கழுத்துல தடவி, அரை

மணி நேரம் காய விடவும். அப்புறம் விரல்களை பாலில் நனைத்து, முகத்துல லேசா தேய்ச்சு எடுத்துக் கழுவலாம். இது சுருக்கங்களோ, கோடுகளோ வராம, சருமத்தை டைட்டாக வைக்கும்.

Loading...

728

2