new BB1

ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் பயன்படுத்தி ஆங்கிலம் அறிந்து கொள்ளுங்கள்!

Loading...

18859உலகம் முழுவதிலும் பிரபலமாக இருக்கும் ஆங்கில மொழி உங்களுக்கு பிரச்சனையாக இருக்கின்றதா. இனி கவலையை விட்டு சிறிய APP ஐ பயன்படுத்தி ஆங்கில மொழியில் புலமை பெறுங்கள். அடங்கப்பா இப்படியும் இருக்கா ?
உலகளவில் மொழிகளை கற்பது கடந்த முப்பது ஆண்டுகளாக பல மாற்றங்களை கண்டு வருகின்றது. புத்தகங்களில் துவங்கி ட்யூஷன் சென்று வந்த காலம் முடிந்து இன்று ஒரு விஷயத்தை அறிந்து கொள்வது சில பல க்ளிக் மற்றும் கூகுள் தேடல்களில் அடங்கி விடுகின்றது.
சிறுவர்களிடம் தமிழ் மொழியை வளர்க்கும் APP வெளியிட்டது சிங்கப்பூர் அரசு. இதை நன்கு அறிந்த தனியார் நிறுவனம் ஒன்று மக்கள் ஆங்கிலம் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் APP ஒன்றை இலவசமாக வெளியிட்டிருக்கின்றது. APP குறித்த தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்..
Culturealley
இந்த நிறுவனம் தனது பணியினை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கியது. APP களை பதிவிறக்கம் செய்ய இங்கு Click செய்யவும்.
இலவசம் தற்சமயம் இலவசமாக கிடைக்கும் இந்த செயலி சுமார் 2.2 மில்லியன் பதிவிறக்கங்களை கடந்து விட்டது. இதற்கான வருமானத்தினை இந்த செயலி விளம்பரங்களின் மூலம் ஈட்டுகின்றது.
வரவேற்பு
மொத்த மக்கள் தொகையில் சுமாராக 15% பேர் மட்டுமே ஆங்கிலத்தில் புலமை கொண்டிருப்பதால் இந்த செயலி பல லட்சம் பேருக்கும் உதவியாக இருக்கும் என இந்த APP துணை நிறுவனர் ப்ரன்ஷூ பட்னி தெரிவிக்கின்றார்.
செயல்பாடு
இந்த APP அதி நவீன வாய்ஸ் ரெகக்னீஷன் மென்பொருள் மற்றும் எழுதுதல், படித்தல், பேசுதல் மற்றும் கேட்பது போன்ற ஆப்ஷன்களை கொண்டிருக்கின்றது.

Loading...

728

2