new BB1

ஃப்ரைட் ரைஸ்

Loading...

தேவையான பொருட்கள்:-

பாஸ்மதி அரிசி – 300கிராம்
சிக்கன் – அரைகப்
இறால்(Shrimphs) -அரைகப்
நறுக்கிய காய்கறிகள் -ஒருகப்
வெங்காயம் -2
சோயா சாஸ் -2டீஸ்பூன்
எண்ணெய் – 3டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் – அரைடீஸ்பூன்
உப்பு – தேவைக்கு

Fried_Rice_335x280

செய்முறை:

அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து உதிரியாக வடித்து ஆறவைத்து ஃப்ரிட்ஜில் முன்பே வைத்து கொண்டால் ஃப்ரைட் ரைஸ் செய்யும் பொழுது உபயோகித்து கொள்ளலாம்.

சிறிய துண்டாக நறுக்கிய சிக்கனை நன்கு அலசி தண்ணீர் வடிகட்டவும்,இறாலையும் சுத்தம் செய்து அலசி தண்ணீர் வடிகட்டவும்,சிக்கன்,இறால் இரண்டிலும் தலா அரைடீஸ்பூன் திக் சோயா சாஸ் அல்லது ஆயிஸ்டர் சாஸ் கலந்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தில் அடிப்பகுதியை நறுக்கி தாளிக்க பயன்படுத்தவும்,மேற்பகுதியை அலங்கரிக்க பயன் படுத்தலாம்.

பின்பு ஊறிய சிக்கன்,இறாலை சேர்க்கவும்.சிறிது உப்பு, பின்ச் சர்க்கரை சேர்க்கவும்.பிரட்டி விடவும்.

நறுக்கிய கேரட்,கொடைமிளகாய்,முட்டை கோஸ்,பீஸ்,கார்ன் கலந்து ஒரு கப் சேர்க்கவும்.பிரட்டி விடவும்.சிறிது மூடி போடவும்,காய்கள்,சிக்கன்,இறால் வெந்து விடும்.

எல்லாம் வெந்தவுடன் ஒரு டீஸ்பூன் சோயா சாஸ் சேர்க்கவும்.கலந்து விடவும்.

வடித்த சாதம் சேர்த்து பிரட்டி உப்பு சரி பார்த்து நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் சிறிது மிளகுத்தூள் தூவி இறக்கவும்.

Loading...
728
2