new BB1

அடி வயிற்றுப் பகுதிக்கு சக்தி தரும் சக்தி முத்திரை

Loading...

தந்திர யோகத்தில் செக்ஸ் மூலம் ஆணின் சக்தியை பெண்ணில் செலுத்துவதற்கு இம்முத்திரை பயன்படுகிறது. சக்தி முத்திரை பெண்களுக்கும், ஆண்களுக்கும் தேவையான அனைத்து சக்திகளையும் தருவதாகவும், குறிப்பாக அடி வயிற்றுப் பகுதிக்கு சக்தியைத் தந்து உள் உறுப்புகளுக்கு பலம் தந்து, நல்ல உறக்கம், கருப்பைக் கோளாறு, கர்ப்பம் தரிப்பதில் தாமதம், மாதவிடாய் கோளாறு போன்றவற்றிற்கு நிவாரணம் தரும்.

0744c62e-dc6a-4989-b1a5-9b6a319c152b_S_secvpf

ஆண்களுக்கு, குடல், விரைப்பைகளில் கழிவுகள் தேங்காமல் பாதுகாக்கும். கட்டை விரலை மடக்கிக் கொண்டு, ஆள்காட்டி விரல், நடுவிரலை அதன் மீது மடக்கிவைக்கவும். மோதிர விரல், சுண்டு விரலை மற்றொரு கையின் மோதிர விரல், சுண்டு விரல் நுனியோடு சேர்க்கவும். இவ்வாறு 15 முதல் 20 நிமிடம் செய்யலாம்.

Loading...
728
2