new BB1

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ் 6 மற்றும் எஸ்6 எட்ஜ் அறிமுகப்படுத்தப்பட்டது

Loading...

1425316604yarlminnal.com (8) (1)

உலகம் முழுவதிலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் எஸ் 6 மற்றும் எஸ்6 எட்ஜ் ஸ்மார்ட்போன்கள் ஓரு வழியாக வெளியாகிவிட்டது. அடுத்து வரும் ஸ்லைடர்களில் சாம்சங் கேலக்ஸி எஸ்6 மற்றும் கேலக்ஸி எஸ்6 எட்ஜ் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களை பாருங்கள்.. கேலக்ஸி எஸ்6 எட்ஜ் டிஸ்ப்ளே சாம்சங் நிறுவனம் எட்ஜ் வகை எஸ்6 ஸ்மார்ட்போனில் 5.1 இன்ச் குவாட் ஹெச்டி 1440 x 2560 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொடுத்துள்ளது. பேட்டரி கேலக்ஸி எஸ் 6 எட்ஜ் பேட்டரியானது 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 4 மணி நேரத்திற்க்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராசஸர் புத்தம் புதிய 14nm 64-பிட் சாம்சங் எக்ஸைனோஸ் ஆக்டாகோர் சிப் கொண்டு இயங்குவதோடு 3ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது. இயங்குதளத்தை பொருத்த வரை ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் கொண்டுள்ளது. மெமரி சாம்சங் கேலக்ஸி எஸ்6 போன்றே கேலக்ஸி எஸ்6 எட்ஜிலும் 16 ஜிபி மெமரி ஆப்ஷன்களை வழங்கமால் 32, 64 மற்றும் 128 ஜிபி மெமரிகளை வழங்கி இருப்பதோடு கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதியை வழங்கவில்லை. கேமரா கேமராவை பொருத்த வரை 16 எம்பி ப்ரைமரி கேமரா, மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா இருக்கின்றது. முன்பக்க கேமராவில் வைடு ஆங்கிள் லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Loading...
728
2