new BB1

அன்னாசிப் பழச்சாறு

Loading...

Fresh-Pineapple-Juice-Fights-Infections-and-Kills-Bacteria-540x330

தேவையான பொருட்கள்:

அன்னாசிப்பழம் -1கிலோ
சர்க்கரை -2கிலோ
தண்ணீர்-1லிட்டர்
சிட்ரிக்அமிலம் -5கிராம்
பொட்டாசியம்
மெட்டாபை சல்பைடு -3 கிராம்
நிறப்பொடி -1ஸ்பூன்
எசன்ஸ் -1ஸ்பூன்

செய்முறை

பழத்தின் மேல்பாகத்தையும்,தோலைச் சுற்றியுள்ள இலைகளையும் அகற்றி நல்ல தண்ணீரில் கழுவியபின், கத்தியால் தோலை அகற்றவும் , பழத்தின் மேலுள்ள குழிபோன்ற மொக்குகளையும்,கெட்டுப்போன பகுதிகளையும் ஒதுக்கிவிட்டு தண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கூழாக்கவும். சாற்றைப் பிழிந்து வடிகட்டிக் கொள்ளவும்.

மேலும் அதனை சர்க்கரையைத் தண்ணீரில் கலந்து பாகு வைத்து அதை வடிகட்டிய சாறுடன் கலந்து கொள்ளவும் பொட்டாசியம் பை சல்பைடையும் சிட்ரிக் அமிலத்தையும் சிறிதுதண்ணீரில் கலந்து சாற்றில் சேர்க்கவும். அத்துடன் நிறப் பொடியையும் எசன்ஸையும் கலந்து கொதிநீரில் சுத்தப்படுத்தப்பட்ட பாட்டில்களில் ஊற்றி காற்றுப்புகா வண்ணம் அடைத்து சேமித்து வைக்கவும்..

Loading...
728
2