new BB1

இத்தாலியன் சாலட்

Loading...

4025ff60-4ffb-46d6-a765-d418416c12ed_S_secvpf

தேவையான பொருட்கள்:

நறுக்கிய லெட்யூஸ் கீரை (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – 1 கப், வெள்ளரிக்காய் – 1
கேரட் – 1
கலர் குடமிளகாய் – தலா 1
வேர்க்கடலை, கார்ன் – கால் கப்
கொத்தமல்லித்தழை – தேவையான அளவு
வால்நட் – ஒரு டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்.

சாலட் அலங்கரிக்க:

ஆலிவ் எண்ணெய் – தேவையான அளவு
வெங்காயம் – 1
வெங்காயத்தாள் – சிறிதளவு
ஆரிகனோ (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் (பொடித்தது),
மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

• வெள்ளரிக்காய், வெங்காயம், வெங்காயத்தாள், குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• கேரட்டை துருவிக்கொள்ளவும்.

• வேர்க்கடலை, கார்ன் உடன் உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.

• ‘சாலட் அலங்கரிக்க’ கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாக கலந்து 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

• ஒரு பாத்திரத்தில் வேக வைத்தவை,இதனுடன் லெட்யூஸ் கீரை, வெள்ளரிக்காய், கேரட், குடமிளகாய், கொத்தமல்லித்தழை, வால்நட், எலுமிச்சைச் சாறு சேர்த்து… சாலட் அலங்கரிப்பையும் சேர்த்து நன்றாகக் கிளறிப் பரிமாறவும்.

• இது மிகவும் சுவையாக இருக்கும். டயட்டில் இருப்பவர்கள் எடுத்துகொள்ள வேண்டிய உணவு இது.

Loading...
728
2