new BB1

இளைப்பு இருமல் தீர்க்கும் தவசு முருங்கை

Loading...

தவசு முருங்கை எல்லா வளமான நிலங்களிலும், தரிசு நிலங்களிலும் வளரக்கூடியது.

0652ec8a-d4ab-482d-82ed-383b9da3277d_S_secvpf

தென் இந்தியாவில் எங்கும் காணப்படுகிறது. எதிர் அடுக்கில் சிறு இலைகளை இரு பக்கமும் கொண்டிருக்கும்.

இலைகளின் இடுக்குகளில் சிறு மலர்கள் தென்படும். தவசு முருங்கை சுமார் ஆறு அடி உயரம் வரை வளரும். இந்த இலைகளின் சுவை துவர்ப்பாக இருக்கும்.

பயன்கள்:

தவசு முருங்கையினால் மூக்கு நீர்பாய்தல், இரைப்பு, பொடியிருமல் நீங்கும். கோழையகற்றும் குணமுடையது.

இலை இரசத்தை வேளைக்கு ஓர் உச்சிக் கரண்டி அளவு உட்கொள்ள பிள்ளை பெற்ற அழுக்கு வெளிப்படும்.

இலைச்சாற்றை 15 மி.லி. காலை மாலை சாப்பிட்டு வரப் பீனிசம், சளி, இளைப்பிருமல், பொடி இருமல் ஆகியவை தீரும்.

செடியை முழுமையாக உலர்த்திப் பொடித்துச் சமனளவு சர்க்கரைப்பொடி கலந்து அரைத் தேக்கரண்டி தேனில் குழைத்து உண்டு வர சளி, இருமல் ஆகியவை தீரும்.

அடிபட்ட வீக்கம் காயங்களுக்கு இலையை வதக்கிக் கட்ட உடன் வேதனை குறைந்து குணமாகும்.

Loading...
728
2