new BB1

உங்கள் செல்போனை ஒரு நிமிடத்தில் சார்ஜ் செய்ய புதிய வகை அலுமினியம் பேட்டரி வரப்போகிறது..

Loading...

New Technology in Battery – லித்தியம் பேட்டரி வகைகள் தான் இப்போதைக்கு லேட்டஸ்ட் என்று நினைக்கையில் அதற்க்கும் அலுமினிய லித்தியவகை பேட்டரிகள் ஆராய்ச்சி முடிந்து மார்க்கெட்டுக்கு வர ரெடியாகிவிட்டது. இந்த அலுமினிய பேட்டரிகள் சாதார்ண பேட்டரியை விட 200% மடங்கு சக்தி வாய்ந்தது. இது சாதாரண பேட்டரியை விட நாலில் ஒரு பங்கு மட்டுமே எடை உள்ளது.

aluminum_news

முக்கியமாக இந்த பேட்டரியில் தீப்பிடிக்கவோ அல்லது வெடித்தால் அல்லது கீழே உடைந்தாலோ இதனால் பாதிப்பு ஒன்றுமே இல்லை என்பது தான் அதி முக்கியம். அடுத்து சாதாரண பேட்டரிக்கு ஆகும் சார்ஜ் நேரத்தை விட பத்தில் ஒன்று தான் இந்த வகை பேட்டரிக்கு ஆகும் நேரம். இதன் மூலம் அதி விரைவு சார்ஜிங் மற்றும் மறு சுழற்ச்சி என பல விஷயங்களை கொண்ட இந்த பேட்டரி இனிமேல் எல்லா இடத்திலும் வலம் வரும் என்பதில் ஐயமில்லை.

சாதாரண மொபைல் பேட்டரி 1000 சைக்கிள்களை கொண்டிருக்கும் ஆனால் இவ்வகை பேட்டரி 7500 சைக்கிள்களை வரை சோதனை செய்யபட்டதால் அடிக்கடி சார்ஜும் இறங்காது என்பது கூடுதல் தகவல். இதை ஸ்டான்ஃபோட் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்து உள்ளனர்.

Loading...
728
2