new BB1

உடல் பருமனை குறைக்கும் பசலை கீரை சூப் செய்முறை!

Loading...

14853

தேவையான பொருட்கள்

1 கப் பசலை கீரை
3 பூண்டு
சிறிது மிளகு

செய்முறை

கீரையை நன்றாக சுத்தம் செய்து, அதை சிறிது சிறிதாக நறுக்கி குக்கரில் போட்டு மூன்று பூண்டு மற்றும் சிறிது மிளகு போட்டு குக்கரை மூடி வைக்கவும். மூன்று விசில் சத்தம் வரவும் அதை அரைத்து உப்பு போட்டால் உடல் பருமனை குறைக்கும் சூப் தயார்.

ஓட்ஸ் பசலை கீரை சூப்

கொடிப் பசலை அல்லது செடிப்பசலை இவற்றில் ஏதாவது ஒரு வகைப் பசலைக் கீரையைக் காம்பு நீக்கிக் கழுவிசுத்தம் செய்ய வேண்டும்.இரண்டு டம்ளர் தண்ணீரில் கீரையையும் அதனுடன் 50 கிராம் ஓட்ஸ்ம் சேர்த்து 5 நிமிடம் வேக விடவேண் டும்.

நன்கு வெந்தவுடன் கரண்டியால் மசித்துத் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இறக்கி வைத்து ஒரு எலுமிச்சம் பழச்சாறு, மிளகுப் பொடி- 2 தேக்கரண்டி, பால் – 1 டம்ளர் சேர்க்கவும். சூடான ஓட்ஸ் பசலைக் கீரை சூப் ரெடி. சூடாக அருந்தவும்.

பசலைக்கீரை மிக உயர்ந்த உணவாக உள்ளது. எளிதில் செரிமானமாகும் இந்த கீரை குளிர்ச்சி தரக்கூடியது. எரிச்சலைத் தணிக்கின்றது. இதில் தண்ணீரில் கரையக்கூடிய ஒரு வகைப் புரதச்சத்து உள்ளது. மேலும் வைட்டமின் ‘ஏ’, ‘பி’, ‘சி ‘ ஆகியனவும், பொட்டாசிய உப்பின் காரச்சத்தும் அதிக அளவில் உள்ளன. வைட்டமின் ‘ஏ’ பார்வைக் கோளாரைக் குணப்படுத்தும். பசலைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது, இதில் உள்ள இரும்புச் சத்து மிகவும் சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது. எனவே ரத்த சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் பயன் தருகின்றது. இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களுக்கு உதவும் சிவப்புச்சத்து (ஹிமொகுளோபின்) உள்ளது. புரதங்களைப் பலப்படுத்தும் அமிலங்கள் உள்ளன. இரத்த விருத்தி உண்டாக்கும். சோடியம், போலாசின்,கால்சியம் உள்ளன ஆனால் கொழுப்பு சத்து இல்லை.

Loading...
728
2