new BB1

எட்டு வடிவ நடைபயிற்சி முறை

Loading...

எட்டு வடிவ நடைப்பயிற்சி செய்யும் முறை: காலைநேரத்திலோ அல்லது நேரம் கிடைக்கும் போதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்டவெளியிலோ, கிழக்கு மேற்காக கோடு வரைந்து அதே போல் 12 அடி விட்டு மற்றுமொரு கோடு கிழக்கு மேற்காக வரைந்து அந்த இரு கோடுகளுக்குள் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். [இரு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெறும்போது நடத்தப்படும் எட்டு போடும் தேர்வு போல]

43d01b11-ad9d-483e-a2fe-12171572aa1c_S_secvpf

இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். 15வது நிமிட முடிவில் ஒரு நாசித் துவாரத்தின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம். பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிடம் நேரம் தொடர வேண்டும்.

இப்போது மாறுபட்ட திசையில் எட்டு நடையைப் போடுங்கள். அதாவது முதலில் தெற்கிலிருந்து வடக்காக எட்டு போட்டிருந்தால் இப்போது வடக்கிலிருந்து தெற்காக எட்டு போடுங்கள்.

மாறாக முதலில் வடக்கிலிருந்து தெற்காக எட்டு போட்டிருந்தால் இப்போது தெற்கிலிருந்து வடக்காக எட்டு போடுங்கள். ஆக மொத்தம் 30 நிமிடங்கள் எட்டு வடிவ நடையை இரு திசைகளிலும் சேர்த்து முடிக்க வேண்டும். இந்த பயிற்சியால் மார்புச்சளி தானாகவே கரைந்து மறைவதை உணரலாம்.

முதலில் எட்டுப் பயிற்சி செய்து விட்டு வேறு பயிற்சிகளையும் தேவையானால் செய்யலாம். இந்தப்பயிற்சியை காலை, மாலை ஒரு மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் இரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதைக் காணலாம்.

இந்த பயிற்சியால் முதுமை இளமையாகும். சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி மலச்சிக்கல் தீரும்.

முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால், ஐந்து கிலோ பிராணவாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளிலும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

கண்பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் செல்லும் அதிகப்படியான பிராணவாயுவால் உடல் சக்திப்பெறுகிறது.

காலையிலும் மாலையிலும் ஒருமணிநேரம் இந்த பயிற்சி செய்து வந்தால் குடலிறக்க நோய் குணமாகும். அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.

இரண்டு வேளை 30 நிமிடம் செய்தால் பாதவெடிப்பு, வலி, மூட்டுவலிகள் மறைந்து விடுகின்றன.

Loading...
728
2