new BB1

ஏழு கறி சாம்பார்

Loading...

ஏழு கறி சாம்பார்என்னென்ன தேவை?

வேக வைக்க…

பீன்ஸ் – 6,
கேரட் – 1,
கத்தரிக்காய் – 3,
அவரைக்காய் – 6,
முருங்கைக்காய் – 1,
பூசணிக்காய் – 50 கிராம்,
பெங்களூர் கத்தரிக்காய் (சௌ சௌ) – 50 கிராம்,
தக்காளி – 2,
சின்ன வெங்காயம் – 10,
பச்சை மிளகாய் – 2,
சாம்பார் தூள் – 3 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
வெல்லம் – சிறிது,
புளி – எலுமிச்சை அளவு (கரைத்துக் கொள்ளவும்),
உப்பு – தேவைக்கு.
துவரம் பருப்பு – 150 கிராம்,
பெரிய வெங்காயம் – 1,
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்,
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்.

தாளிக்க…

எண்ணெய் – 3 டீஸ்பூன்,
நெய் – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
சின்ன வெங்காயம் – 5,
கொத்தமல்லி – சிறிது.

அலங்கரிக்க…

கொத்தமல்லி – சிறிது.

எப்படிச் செய்வது?

துவரம் பருப்பைக் களைந்து, 1 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு, வெங்காயம், வெந்தயம், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் மசித்துக் கொள்ளவும். காய்களைக் கழுவி அரிந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காய்கறிகள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க
விடவும். அதில் சாம்பார் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

காய் வெந்ததும் கரைத்த புளி சேர்த்துக் கொதிக்க விடவும். வெல்லம் மற்றும் வெந்த பருப்பைச் சேர்த்து கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிது தூவி கொதிக்கவிட்டு இறக்கவும். கடைசியாக தாளிக்க வேண்டி யவற்றை தாளித்து சாம்பாரில் சேர்த்து இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும். மசூர் தால், மூங் தால் கொண்டும் சாம்பார் செய்யலாம். நீரிழிவுக்காரர்களுக்கு காய்கறிகளுடன், பாகற்காயை சேர்க்கலாம். கசப்புத் தெரியாது.

Loading...
728
2