new BB1

ஒரு மில்லியன் மைல்களுக்கு தொலைவில் இருந்து பார்த்தால் பூமி எப்படி இருக்கும்? நாசா வெளியிட்ட அற்புத புகைப்படம்

Loading...

ஒரு மில்லியன் மைல்களுக்கு தொலைவில் இருந்து பார்த்தால் பூமி எப்படி இருக்கும் என்று நாசாவின் செயற்கைகோள் படம் பிடித்து அனுப்பியுள்ளது.
நாசா சமீபத்தில் புளூட்டோ கிரகத்தின் நெருங்கிய புகைப்படங்களை வெளியிட்டது.
இந்நிலையில் முதல் முறையாக சூரிய ஒளிப்படும் பூமியின் பக்கத்தை சுமார் 1 மில்லியன் மைல்களுக்கு தொலைவிலிருந்து நாசா செயற்கை கோள் படம் பிடித்து அனுப்பியுள்ளது.

nasa_earth_002

நாசாவின் டிஸ்கவர் செயற்கை கோள் பாலிகுரோமட்டிக் இமேஜிங் கேமரா என்ற அதிநவீன கமெரா மூலம் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தில் நீல கடல்களுக்கு , வெள்ளை மேகங்களும் பச்சை மற்றும் பழுப்பு நிறத்தில் நிலப்பரப்பும் அற்புதமாக பதிவாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்து ஆச்சரியப்பட்ட அமெரிக்க அதிபர் ஒபாமா தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளதாவது,இந்த அற்புதமான படத்தை பார்க்கும் போது நமக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் இந்த அழகான கோளை எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என்று நினைக்க தோன்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Loading...
728
2