new BB1

ஓட்ஸ் பருப்பு டிக்கி

Loading...

5f89b1a4-a651-44b3-aa7c-ad133c559c0d_S_secvpf

தேவையான பொருட்கள் :

பாசிப் பருப்பு – 1/4 கப்
ஓட்ஸ் – 3/4 கப்
வெங்காயம் – 1
கேரட் – 1
தயிர் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கு
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை :

• வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• கேரட்டை துருவிக் கொள்ளவும்.

• பாசிப்பருப்பை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

• ஓட்சை வெறும் கடாயில் சிவக்க வறுத்து பொடித்து கொள்ளவும். பொடித்ததில் பாதியை தனியாக எடுத்து வைக்கவும்.

• ஒரு பாத்திரத்தில் மசித்த பருப்பு, துருவிய கேரட், வெங்காயம், பொடித்த ஓட்ஸ் மாவு (முக்கால் பாகம்), மிளகாய் தூள், உப்பு, கொத்தமல்லி, கரம் மசாலா, தயிர் சேர்த்து நன்றாக மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

• இந்த மாவில் எலுமிச்சை அளவு மாவை எடுத்து கையில் வைத்து தட்டி ஓட்ஸ் மாவில் பிரட்டி வைக்கவும்.

• தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் இந்த தட்டி வைத்த மாவை போட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

• சுவையான ஓட்ஸ் பருப்பு டிக்கி ரெடி. இதை புதினா சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Loading...
728
2