new BB1

கடலைபருப்புபுடலைங்காய் கூட்டு

Loading...

கடலைபருப்புபுடலைங்காய் கூட்டு

தேவையானவை

கடலை பருப்பு – 100 கிராம்
புடலங்காய் – 2
காய்ந்த மிளகாய் – 3
சீரகம் – 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 2
தேங்காய் – சிறிதளவு
மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்
தக்காளி – 1
தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை

புடலங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும் .புடலங்காய்,கடலைபருப்பு இரண்டையும் குக்கரில் போட்டு 3 விசில்வரை வேக வைக்கவும்.காய்ந்த மிளகாய்,சீரகம் ,சின்ன வெங்காயம் ,தேங்காய், மஞ்சள்தூள் அனைத்தையும் சற்று கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

காய்வெந்தவுடன் அரை்த்த மசாலா ,தக்காளி உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். பின்பு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து குழம்பில் கொட்டவும்.

Loading...
728
2