new BB1

கூகுள் சினிமா கொட்டாய் ; 25 ரூபா டிக்கெட்டு..!

Loading...

திரைப்படம் எடுத்து வெளியிடுவது சாதாரண விஷயமே கிடையாது என்றாலும் நம்மவர்கள் திரைப்படம் வெளியாகும் முன்பே அதன் திருட்டு டிவிடிக்களை வெளியிடுகின்றனர். இது சட்டப்படி குற்றம் என்றாலும் தமிழகத்தில் தொடர்ந்து திருட்டு டிவிடிக்கள் புழக்கத்தில் இருக்கவே செய்கின்றது.

கூகுள் சினிமா கொட்டாய் ; 25 ரூபா டிக்கெட்டு..!

‘திருட்டு டிவிடி கும்பல் கைது’ என தினசரி செய்திகள் வெளியானாலும் இதனுடன் இணையதளங்களும் சேர்ந்து கொள்கின்றன. புதிய திரைப்படங்களை இணையத்தின் மூலம் வெளியாகி பலருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கூகுள் ப்ளே ஸ்டோர் ‘மூவிஸ்’ அம்சம் அமைந்துள்ளது. இதன் மூலம் கூகுள் ப்ளே ஸ்டோரின் மூவிஸ் பகுதியில் இருந்து தமிழ் உட்பட பல மொழி திரைப்படங்களை ரூ.25க்கு பார்க்க முடியும்.

Loading...
728
2