new BB1

கேசரி

Loading...

Ravaa_Kesari_332x257

தேவையான பொருட்கள்:-

ரவை – 1 டம்ளர்
சர்க்கரை – 2 டம்ளர்
தண்ணீர் – ஒன்றரை டம்ளர்
நெய் – அரை டம்ளர்
முந்திரிப் பருப்பு – 10
ஏலக்காய் – 4
கேசரி பவுடர் – 1 தேக்கரண்டி
பன்னீர் – 2 தேக்கரண்டி

​செய்முறை:-

முந்திரியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

​ஏலக்காயை தூள் செய்து கொள்ளவும். நெய்யை உருக்கிக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து 2 தேக்கரண்டி நெய் ஊற்றி நறுக்கிய முந்திரியை பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும்.

​​அதே நெய்யில் ரவையைக் கொட்டி நன்றாக வறுக்கவும்.

தண்ணீரைக் கொதிக்க வைத்து வறுத்த ரவையில் ஊற்றி, கட்டியாகாமல் நன்றாகக் கிளறவும்.

​​ரவை நன்றாக வெந்ததும், சர்க்கரையை சேர்த்துக் கிளறவும்.

​​கேசரி பவுடரை தண்ணீல் கரைத்து ஊற்றவும், பன்னீரையும் சேர்க்கவும்.

உருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக கேசரியில் ஊற்றிக் கிளறிக் கொண்டே வரவும்.

​​வறுத்த முந்திரி, பொடித்த ஏலக்காயைச் சேர்த்துக் கிளறவும்.

​​பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கி விடவும்.

Loading...
728
2