new BB1

கொத்தவரங்காய் பொரியல்

Loading...

கொத்தவரங்காய் பொரியல்

தேவையான பொருள்கள்:

கொத்தவரங்காய் – 1/2 கிலோ
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1டீஸ்பூன்
கறிவேப்பில்லை – சிறிது

அரைக்க:
தேங்காய்த்துறுவல் – 1/4 கப்
காய்ந்த மிளகாய் -4
சீரகம் – 1 டீஸ்பூன்
சின்னவெங்காயம் – 2

செய்முறை:

கொத்தவரங்காயை பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடிகட்டி வைக்கவும்.
அரைக்க குடுத்துள்ளவைகளை அரைக்கவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவகைகளை தாளித்து பின் வெந்த காயை கொட்டி,அரைத்த மசாலாவுடன் சிறிது நீர் சேர்த்து கிளறவும்.
நீர் சுண்டிய பின் நன்கு கிளறி இறக்கவும்

Loading...
728
2