new BB1

கோவக்காய் சாதம்

Loading...
கோவக்காய் சாதம்தேவையான பொருட்கள்:
கோவக்காய் – 20
பெரிய வெங்காயம் – 2
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
நிலக்கடலை – ஒரு கைப்பிடி
எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு இணுக்கு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
• பெரிய வெங்காயத்தையும், கோவக்காயையும் நீளமாக நறுக்கி கொள்ளவும்.
• சாதத்தை உதிரியாக வடித்து ஒரு அகன்ற பாத்திரத்தில் ஆற விடவும்.
• ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பின் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.
• வெங்காயம் வதங்கியவுடன் கோவக்காயைச் சேர்த்து உப்பு, சாம்பார்பொடி போட்டு கால் கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
• சாம்பார் பொடிக்குப் பதிலாகக் காரத்திற்கு இட்லி மிளகாய்ப்பொடியையும் சேர்த்துச் செய்யலாம்.
• இடையிடையே மூடியைத் திறந்து கிளறி விடவும்.
• தனியே வேறொரு வாணலியில் எண்ணெய் விட்டு நிலக்கடலையை வறுத்து கோவக்காய் கலவையுடன் சேர்க்கவும்.
• கோவக்காய் வெந்தவுடன் அடுப்பை அணைத்து எலுமிச்சைச்சாற்றை விட்டு ஆற விட்டு சாதத்துடன் கலக்கவும்.
குறிப்புகள்:
• சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த காய் கோவக்காய். இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
Loading...
728
2