new BB1

கோவைக் பழ உதடு!

Loading...

ld839மனதின் ஜன்னல் கண்கள் என்றால், உதடு அதன் மேடை என்பார்கள். மெல்லிய, தடிமனான, சொப்பு என உதடுகளின் அமைப்பு, நிறம் ஆகியவற்றை பொருத்து லிப்ஸ்டிக் பூசி மேலும் அழகாக்குங்கள்.

* முகத்துக்கு ஏற்ற மாதிரி இல்லாமல் சிறிதாக சொப்பு போன்ற வாய் உள்ளவர்கள் லிப்ஸ்டிக்கை உதடுகளின் இரு முனைகளிலும் சற்று அதிகப்படியாக பூசுங்கள். வாய் சற்று பெரிதாகத் தெரியும்.

* தடித்த உதடுகள் உள்ளவர்கள் உதட்டுக்கு உட்புறமாக லிப் ஸ்டிக் போடுங்கள். இயற்கை நிற லிப்ஸ்டிக்கை லேசாகத் தடவினால் போதும்.

* மெல்லிய உதடு உள்ளவர்கள் கீழ் உதட்டில் டார்க் நிறமும் லைட் நிறத்தை மேல் உதட்டிலும்
பூசுங்கள். பிறகு உதட்டுக்கு வெளியில் பென்சிலால் கோடு போடுங்கள். தடித்த உதடு என்றால் உட்புறமாக போடுங்கள்.

* மாநிற பெண்கள் லைட் ஆரஞ்ச் கலர், கருப்பு நிற பெண்கள் லைட் சிவப்பு, சிவப்பு பெண்கள் லைட் ரோஸ் (பிங்க்) லிப் ஸ்டிக் பயன்படுத்தலாம். உதடுகளின் ஈரப்பசையை நீக்கிவிட்டு லிப்ஸ்டிக் போட்டால் சீக்கிரம் அழியாது.

* காலையில் லைட் கலர் லிப்ஸ்டிக்கும், மாலையில் பளிச் நிறத்திலும் போடுங்கள்.

* ஆடைக்கு ஏற்ற நிறத்தைத் தேர்ந்தெடுத்து போடலாம். டார்க் கலர் போட்டால் வயது அதிகமாக காட்டும். லைட் கலர் கவர்ச்சியாக இருக்கும்.

வீட்டில் இருக்கும்போது லிப்ஸ்டிக் வேண்டாம். அடிக்கடி உபயோகித்தால் உதடுகள் கருமையாகி விடும்.

Loading...
728
2