new BB1

சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு!

Loading...

15131

சர்க்கரை வள்ளிக் கிழங்கு எளிய உணவு போல் தோன்றினாலும் மிக அதிக அளவில் பீட்டா கரோட்டினைத் தர வல்லது. இக்கிழங்கு அரக்குச் சிவப்பு, நல்ல சிவப்பு, வயலட் மற்றும் சிறிது மஞ்சள் நிறங்களை கொண்டது. பச்சையாகவே கடித்து உண்ணத் தக்க இக்கிழங்கின் இனிப்பான சுவையால் தமிழில் இதைச் சர்க்கரை வள்ளி என்றார்கள்.

இதில் சிவந்த மற்றும் இலேசான வயலட் நிறங்கொண்ட கிழங்கு பீட்டா கரோட்டினை நிறைந்த அளவில் கொண்டதாகும். மேலும் இது இரத்தத்தில் விட்டமின் ‘ஏ’ ன் அளவை உயர்த்துகிறது. மேலும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகளையும் Anti oxidant அழற்சி எதிர்ப்பிகளையும் Anti inflammatory தன்னகத்தே கொண்டுள்ளது. இது இனிப்பாக இருப்பதனால் சர்க்கரை நோயுள்ளவர்கள் (Diabetes) இதைச் சாப்பிடக் கூடாது என்று நினைக்கிறார்கள்.இந்த எண்ணத்துக்கு மாறாக இக்கிழங்கில் உள்ள தனி வகையான ஸ்டார்ச் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை நெறிப்படுத்துகிறது. Type 2 வகை சர்க்கரை நோயாளிகள் இதை உண்ணலாம். இதில் நிறைந்த அளவில் நார்ச்சத்து இருப்பதனால் இதிலுள்ள ஸ்டார்ச் இரத்தத்தில் சேர்வதைத் தாமதப்படுத்தி இரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கிறது.

மலச்சிக்கல், மூலம், பவுத்திரம் உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாகும். சர்க்கரை வள்ளிக் கிழங்கில் மிகமிகக் குறைந்த அளவே கொழுப்பும் ஆனால் நிறைய அளவு நார்ச்சத்தும் உள்ளது. ஆன்டி-ஆக்சிடென்டுகளும், வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களும் அதிகம் உள்ளது. மாவுச்சத்தில் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளாக உள்ளது.

இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவே உயர்த்தும். எனவே நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவு உண்ணலாம். மற்ற கிழங்கு வகைகளைவிட இதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளது. இவை இயற்கை நோய் எதிர் பொருட்களாகும். உடலில் வைட்டமின் ஏ ஆக மாறி தேக ஆரோக்கியம் மற்றும் தோல் – நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு உதவும்.

நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது. இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற உடலுக்கு அவசியமான தாது உப்புக்களும் உள்ளது . கையில் எடுத்தால் கிழங்கு கனமாக, கெட்டியாக இருக்க வேண்டும். தோல் புள்ளி எதுவும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும்.

நுனியில் சுருங்கி இருந்தால் பழசு என்று அர்த்தம். வாங்கியதும் மண் படிந்திருந்தால் தோலை கழுவக் கூடாது. ஈரம், கிழங்கை சீக்கிரம் கெடுத்துவிடும். உபயோகிக்கும் முன் சுத்தம் செய்தால் போதும். வாங்கியதுமே பயன்படுத்தி விடவேண்டிய காய்கறி இது. குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் காய்ந்து போய் ருசியும் குறைந்துவிடும்.

Loading...
728
2