new BB1

சீனா உலகின் மிகப்பெரிய கடல் விமானத்தை அசம்பிளிங் செய்யும் பணியை தொடங்கியது!

Loading...

19296சீனா உலகின் மிகப்பெரிய கடல் விமானத்தை அசம்பிளிங் செய்யும் பணியினை தொடங்கிஉள்ளது. சர்ச்சைக்குரிய தெற்குசீன கடல்பகுதியில் அதனை பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது, மேலும் வெளிசந்தையிலும் விற்பனை செய்யும் முயற்சியிலும் உள்ளது. சீனஏவியேஷன் இண்டஸ்ட்ரி விமானதயாரிப்பு நிறுவனம் உலகின் மிகப்பெரிய கடல்விமானத்தை தயாரித்து வருகிறது. விமானத்திற்கு இதுவரையில் நிறுவனம் சுமார் 17 ஆர்டர்களை பெற்று உள்ளது என்று சீன செய்திநிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. சீனாவில் முதல் முறையாக தயாரிக்கப்படும் மிகப்பெரிய கடல் விமானத்தை அசம்பிளிங்செய்யும் பணியினை சீனா தொடங்கிஉள்ளது, சர்வதேச சந்தையில் இது அதிகமான பங்கை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நான்கு டர்போப்ராப் இயந்திரங்கள் மூலம் இயக்கப்படும் இந்த விமானமானது, தரையிலும் நீரிலும் பயன்படுத்தும் வகையிலானது. சீனா மிகப்பெரிய விமானத்தை தயாரிக்கிறது. தரையிலும், நீரிலும் பயன்படுத்தும் வகையில் ஜப்பான் தயாரித்த ஷின்மாய்வா US-2, ரஷியாவின் பெரிய்வ் பி-200 விமானங்களைவிட மிகவும் சிறந்தமுறையில் சீனா தயாரிக்கிறது. இந்தியபெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா முயற்சித்து வருகிறது. இந்தியா ஜப்பானிடம் இருந்து கடல் விமானங்களை வாங்கஉள்ளது. சீனா தயாரிக்கும் இந்த விமானத்தின் எடையானது 53.5 டன்னாக இருக்கும் என்றும் சுமார் 4,500 கிலோ மீட்டர் தொலைவில் செயல்பாட்டில் இருக்கும் என்றும் தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சீனா ஏற்கனவே இதுபோன்ற விமானங்களை கொண்டு உள்ளது. எஸ்.எச்-5 வகையை சேர்ந்த 5 விமானங்களை ரோந்துபணியில் உள்ளது. இதுதொடர்பாக நிறுவனம் தரப்பில் கூறுகையில், “ஏஜி 600 ரக விமானமானது உலகசந்தைக்காகவே வடிவமைக்கப்பட்டது. விமானமானது அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்டு உள்ள காரணத்தினால் விமானத்திற்கு மார்க்கெட்டில் மிகப்பெரிய வாய்ப்பு இருக்கும் என்று எங்களுக்கு மிகவும் நம்பிக்கை உள்ளது. விமானத்தின் எடை மற்றும் செயல்பாட்டு திறனானது மற்ற கடல் விமானங்களைவிட அதிகமாக இருக்கும்,” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு தீவுகூட்டங்களை கொண்டு உள்ள மலேசியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் சீனா தயாரிக்கும் ஏஜி 600 ரக விமானங்களை வாங்க ஆர்வமாக உள்ளனர் என்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ளோம் என்றும் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
சீனாவில் உள்நாட்டு தேவைக்காகவே விமான நிறுவனம் 17 ஆர்டர்களை பெற்று உள்ளது. விமானத்தை வாங்கும் ஒருவர் சுற்றுலாப் பயணிகளை தெற்கு சீனகடல் பகுதியில் உள்ள தீவு கூட்டங்களுக்கு அழைத்து செல்வதற்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளது என்றும் நிறுவனம் தெரிவித்து உள்ளது. தெற்கு சீனகடல் பகுதியில் சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனைய் மற்றும் தைய்வான் ஆகியநாடுகளுடன் பிரச்சனையை கொண்டு உள்ளது. இதற்கிடையே இந்த விமானமானது அங்குபறப்பது பதட்டத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

Loading...
728
2