new BB1

சுருள் நாடா

Loading...

1345540603srul nada

தேவையானவை:

மைதாமாவு – கால் கிலோ
எண்ணெய் – தேவையான அளவு,
நெய் – அரை கப்
அரிசிமாவு & 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு & தேவையான அளவு.

செய்முறை:

மைதாவில் உப்பு போட்டு, நீர்விட்டுப் பிசைந்து கொள்ளவும். அரிசி மாவையும் நெய்யையும் சேர்த்துக் குழைத்துக்கொள்ளவும்.
பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாகத் தேய்க்கவும்.
ஒரு சப்பாத்தியை எடுத்து, நெய், அரிசிமாவுக் கலவையை அதன் மேல் நன்றாகத் தடவி, மேலே இன்னொரு சப்பாத்தியால் மூடவும். பிறகு, இரண்டு சப்பாத்திகளையும் அழுத்தி பாய் போல சுருட்டி, சப்பாத்திக் கட்டையால் அப்படியே நீளவாக்கில் ரிப்பன் போல தேய்க்கவும். இதை, 2 இன்ச் நீளத் துண்டுகளாக வெட்டி, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

Loading...
728
2