new BB1

சுவையான குல்பி ஐஸ் ரெடி!

Loading...

தேவையானபொருட்கள்

  • பால் – கால் லிட்டர்
  • கன்டண்ஸ்டு மில்க் – கால் டின்
  • சீனி – 5 மேசைக்கரண்டி
  • ஃப்ரஷ் க்ரீம் – 2 மேசைக்கரண்டி
  • கார்ன் ஃப்ளார் – 1 1/2 மேசைக்கரண்டி
  • குங்குமப்பூ – சிறிது
  • ஏலத்தூள் – கால் தேகரண்டி
  • பாதாம், பிஸ்தா – சிறிது (விரும்பினால்)
  • உப்பு – சிட்டிகை

 செய்முறை

பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சுண்ட காய்ச்சவும்.

கார்ன் ஃப்ளாரை சிறிது பாலில் கரைத்து காய்ச்சிய பாலில் ஊற்றி குங்குமப்பூ மற்றும் உப்பு சேர்க்கவும்.

அதனுடன் சீனி மற்றும் ஏலத்தூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

பால் ஆறிய பின்பு, கன்டண்ஸ்டு மில்க் சேர்த்து கலக்கவும்.

பின்னர் அதில் ஃப்ரஷ் க்ரீம் சேர்த்து கலக்கவும்.

எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து விடவும்.

விருப்பப்பட்டால் பாதாம், பிஸ்தாவை நுணுக்கி போட்டு மோல்டில் ஊற்றவும்.

ஆறு மணி நேரம் ஃப்ரீசரில் வைத்திருந்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

Loading...
728
2