new BB1

தொடைப் பகுதியை ஃபிட்டாக்கும் அப்ளிக்யூ ஒர்க்அவுட்

Loading...

காலையில் வாக்கிங், மாடிப்படி ஏறி இறங்குவது என எதைச் செய்தாலும் எடை அவ்வளவு சீக்கிரம் குறைவது இல்லை. வருடங்களாகச் சேர்ந்த எடையை, ஒரே நாளில் குறைப்பது சாத்தியமே இல்லை. சில எளிமையான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம், பழைய அழகான உடலைத் திரும்பப் பெற முடியும்.

b35d1c0a-8213-495b-a006-929029e46a44_S_secvpfதரையில் மல்லாக்கப் படுக்க வேண்டும். தலையைத் தரையில் இருந்து உயர்த்தி, இடது கையை மடக்கி, காதின் அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். வலது கையைத் தரையில் நேராக நீட்டிக்கொள்ளவும். வலது காலை மடக்கி இடது கால் முட்டியின் மீது வைக்க வேண்டும்.

இப்போது, இடது காலைத் தரையில் இருந்து இரண்டு அடி உயர்த்தி இறக்க வேண்டும். இதே போல் இடது பக்கமும் செய்ய வேண்டும். இரண்டு கால்களுக்கும் தலா 20 முறை இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும்.

பலன்கள்: வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்கும், தேவையற்ற சதை சேராது. தொடைப் பிடிப்பு, கால் வலி போன்ற பிரச்சனைகள் வராமல் பாதுக்காக்கும். தொடைப் பகுதியை ஃபிட்டாக்கும்.

Loading...
728
2