new BB1

பரிவட்ட அர்த்த சந்த்ராசனம்

Loading...

முதலில் விரிப்பின் மீது காலை அகற்றி வைத்து நேராக நின்று கொள்ள வேண்டும். இடது கையை தோள்பட்டைக்கு நேராக நீட்டி உள்ளங்கை வானத்தை நோக்கி இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். வலது கையையும் இடது காலையும் தரையில் ஊன்றி இடது கையை மேல் நோக்கி நீட்டியபடி வைத்து அதற்கு இணையாக வலது காலை நேராக நீட்டவும்.

4db5a578-93bd-41ea-8509-06bb6caca432_S_secvpf

படத்தில் உள்ளபடி தலைமுதல் கால் வரை ஒரே நேர் கோட்டில் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் இந்த ஆசனம் செய்வது சந்று கடினமாக இருக்கும். கால், கை முட்டிகளை மடக்க கூடாது. இந்நிலையில் மூச்சானது சாதாரண நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு ஒருசில நிமிடங்கள் இருந்து விட்டு பின் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இதே போல் கால்களை மாற்றி 5 முதல் 7 முறை செய்யவும்.

பயன்கள்:

* உடலின் முதுகுத் தண்டு இடப்புறமும், வலப்புறமும் மாறி, மாறி வளைவதால் உடலுக்குப் புத்துணர்வு கிடைப்பதுடன் நரம்புகள் வலுப்பெறும்.

* கழுத்துவலி, தோள்பட்டை வலி போன்றவை நீங்குவதுடன் உடல் பலமடையும்.

* தொப்பையைக் குறைக்கும். இடுப்பு பகுதி வலுப்பெறும்.

* நன்கு பசியைத் தூண்டும், அஜீரணத்தைப் போக்கும்.

* உடலில் உள்ள தேவையற்ற நீர்களைப் போக்கும். சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும்.

இவ்வாசனத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செய்யலாம்

Loading...
728
2