new BB1

பற்களை வெண்மையாக்கும் இயற்கை பேஸ்ட்கள்

Loading...

செயற்கை பொருட்களை விட இயற்கை பொருட்களுக்கு நிறைய மகத்துவம் உள்ளது. அதேப்போல்தான் பற்களை துலக்கவும் ஒரு சில சூப்பரான இயற்கை பேஸ்ட்கள் இருக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம்.

பற்களை வெண்மையாக்கும் இயற்கை பேஸ்ட்கள்

1. வேப்பங்குச்சியை கொண்டு பற்களை துலக்கினால், பற்கள் நன்கு சுத்தமாக பளிச் சென்று, துர்நாற்றம் நீங்குவதோடு, பற்களில் நோய்கள் எதுவும் வராமலும் இருக்கும். ஆகவே வேப்பங்குச்சியை கொண்டு பற்களை துலக்க, முதலில் அந்த குச்சியை உடைத்து, அதன் ஒரு முனையை நன்கு மென்று, பின் தேய்க்க வேண்டும்.

2. உப்பைக் கொண்டும் பற்களை துலக்கலாம். ஏனெனில் இதில் சோடியம் அதிகம் உள்ளது. இதனால் பற்களில் உள்ள அழுக்குகள் போவதோடு, ஈறுகளும் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பற்களில் வலிகள் ஏற்பட்டால், அப்போது இதனைக் கொண்டு பற்களை துலக்கலாம். மேலும் இது வாய் துர்நாற்றத்தை ஏற்படாமலும் தடுக்கும். ஆகவே தினமும் ஒரு டீஸ்பூன் உப்பை எடுத்துக் கொண்டு, பற்களை துலக்குங்கள், பின் பாருங்கள் அதன் நன்மை எப்படி இருக்கிறதென்று.

3. எலுமிச்சையில் அதிகமான அளவு வைட்டமி ன் சி உள்ளது. இது பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைக்கும். பொதுவாக இந்த எலுமிச்சை எத்தகைய அழுக்குகள் என்றாலும் நீக்கிவிடும், அத்தகையது பற்களில் உள்ள அழுக்குகளை நீக்காமலா இருக்கும். ஆகவே அதற்கு தினமும் எலுமிச்சை சாற்றை வைத்து பற்களை மற்றும் ஈறுகளை தேய்க்க வேண்டும். பின் பாருங்கள் வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

Loading...
728
2