new BB1

பாதாம் ஹல்வா

Loading...

தேவையான பொருட்கள்:-

• பாதாம் – கால் கிலோ
• பால் – அரை டம்ளர்
• குங்குமப்பூ – ஒரு பின்ச்
• பட்டர் – 200 கிராம்
• சர்க்கரை – கால் கிலோ
• கேசரி கலர் – ஒரு சிட்டிகை

Batham_Halwa_332x259

செய்முறை:

• பாதாமை கொதிக்கும் வெந்நீரில் போட்டு தோலை உரித்து கட் செய்து மிக்ஸியில் பால், குங்குமப்பூ சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

• ஒரு நாண் ஸ்டிக் பானில் பட்டரை போட்டு லேசாக உருக்க வேண்டும் முக்கால் வாசி உருகும் போது அரைத்த பாதாமை போட்டு கைவிடாமல் நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.

• பிறகு கேசரி கலர் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பூனில் கலக்கி ஊற்றவும்.

• கிளறி கலர் மாறி வரும் போது சர்க்கரை சேர்த்து நன்கு ஹல்வா பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.

Loading...
728
2