new BB1

புத்துணர்ச்சி தரும் புதினா – இஞ்சி – எலுமிச்சை ஜூஸ்

Loading...

a7643b36-4d55-49aa-ae5c-9cb3424a9bff_S_secvpf

தேவையானவை:

புதினா – ஒரு கைப்பிடி,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
எலுமிச்சைப் பழம் – 1,
தேன் – தேவையான அளவு.

செய்முறை:

• புதினாவை இலைகளை மட்டும் எடுத்து நன்றாக கழுவி வைக்கவும்.

• இஞ்சியைத் தோல் சீவி நறுக்கி கொள்ளவும்.

• மிக்சியில் இஞ்சி, புதினா சேர்த்து, அரைத்து வடிக்கட்டி கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய புதினா சாறை ஊற்றி அதில் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து, தேவையான அளவு தண்ணீர், தேன் கலந்து பருகவும்.

குறிப்பு: புதினாச் சாறு, வாய்க்குப் புத்துணர்ச்சி தரும். ஜீரணசக்திக்கு உதவும்.

பலன்கள்: புதினா, எலுமிச்சையில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி இருப்பதால், கண், தோலுக்கு மிகவும் நல்லது. ஜீரணசக்தி அதிகரிக்கும். இதய நோயாளிகளுக்கு நல்லது. மலச்சிக்கலைப் போக்கும். தாகத்தைத் தணிக்கும். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை சேர்க்காமல் அருந்தலாம்.

Loading...
728
2