new BB1

பெண்கள் இடத்திற்கு ஏற்ப எந்த நகைகளை அணியலாம்

Loading...

பெண்கள் எங்கு சென்றாலும், அது திருமண விழாவாக இருந்தாலும் அல்லது பார்ட்டியாக இருந்தாலும் அல்லது வேலை செய்யும் இடமாக இருந்தாலும் உடைகளோடு சேர்த்து நகைகளும் பிறரால் கவனிக்கப்படுகின்றன.

0b60e64d-9dc0-497f-9d1e-841190f6df67_S_secvpf

இந்த நேரத்திற்கு இந்த கலர் நகைகளை அணிந்தால் நன்றாக இருக்கும் என்ற நடைமுறைம் உண்டு. அப்படி பார்த்தால் பகல் நேரத்தில் சில்வர் கலர் நகைகளும், மாலை நேரத்துக்கு கோல்டு கலர் நகைகளும் ஏற்றவை. நகைகளை பொறுத்தவரை பார்மல், கேஷுவல், ரைடல், ஈவ்னிங், ஸ்பிரிச்சுவல் என 5 வகையாக பிரிக்கலாம். இந்த ஐந்தும் வடிவமைப்பாலும், பயன்படுத்தபடும் நேரத்தாலும், தயாரிக்கபடும் பொருட்களாலும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை.

பார்மல்: திருமணம், மீட்டிங் போன்ற விழாக்களில் அணிந்து கொள்ளக்கூடிய நகைகள் இவை. நெக்லஸ், வளையல், பிரேஸ்லெட், மோதிரம், காதுவளையம் போன்றவை இதில் குறிபிடத்தக்கவை. இந்த நகைகள் ஒயிட் மெட்டல், பிளாக் மெட்டல், களிம, சிபி, துருபிடிக்காத எக்கு போன்றவற்றால் தயாரிக்கபடுகின்றன. ரத்தினம், கிரிஸ்டல், அலங்காரக்கல் போன்றவையும் இந்த நகைகளில் பயன்படுத்தபடுகின்றன.

கேஷுவல்: தினமும் அணிந்து கொள்ளக்கூடிய நகைகளை கேஷுவல் லிஸ்ட்டில் சேர்க்கலாம். இவை தண்ணீரில் நனைந்தாலும் பாதிப்படையாது. கைவேலைபாடுகள் மிகுந்த நகைகளும் இதில் அடங்கும். சணல், மரம், பேப்பர் போன்றவற்றால் இவை தயாரிக்கப்படும். செயின், வளையல், மோதிரம் போன்றவை கேஷுவல் நகைகளில் குறிப்பிடத்தக்கவை. சிப்பிகளால் தயாரிக்கப்படும் இதுபோன்ற நகைகளை இளம்வயதினர் விரும்பி வாங்குகின்றனர்.

ரைடல்: திருமண பெண் அணிந்து கொள்ளக்கூடிய நகைகள் ரைடல் எனப்படும். இவை ஒயிட் மெட்டல், ஒயிட் கோல்டு, மஞ்சள் கோல்டு, வைரம், ரத்தினம் போன்றவற்றால் தயாரிக்கபடும். இதுபோன்ற நகைகள் மணப்பெணுக்கு என்றே விசேஷமாகத் தயாரிக்கப்படுகின்றன. பலவிதமான வெரைட்டிகளுடன் இந்த நகைகள் உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஈவ்னிங்: மாலை நேரங்களில் நடைபெறும் பார்ட்டிகள், ரிசப்ஷன் போன்றவற்றிற்கு அணிந்து செல்லக்கூடிய நகைகள். துருபிடிக்காத எக்கு, ஒயிட் மெட்டல், பிளாக் மெட்டல், களிம, கிரிஸ்டல் போன்றவற்றால் செய்யப்படும். செயின், வளையல், பெரிய காது வளையம் போன்றவை இதில் குறிப்பிடத்தக்கவை.

ஸ்பிரிச்சுவல்: மதம் சார்ந்த, வழிபாடு சார்ந்த நகைகள் இவை. மதக் குறியீடுகளுடனும், அடையாளங்களுடனும் இந்த நகைகளை ஆண், பெண் என இருவருமே பயன்படுத்துகின்றனர்.

Loading...
728
2